MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Toxic OTT : 200 கோடிலாம் தர முடியாது... டாக்ஸிக் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கும் ஓடிடி தளங்கள்..!

Toxic OTT : 200 கோடிலாம் தர முடியாது... டாக்ஸிக் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கும் ஓடிடி தளங்கள்..!

Toxic Movie OTT Rights : கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லையாம். அதன் பின்னணியை பார்க்கலாம்.

2 Min read
Author : Asianet News
Published : Sep 07 2026, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Toxic Movie OTT Rights
Image Credit : Instagram

Toxic Movie OTT Rights

பான் இந்தியா சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கன்னடம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. சாக்னில்க் அறிக்கையின்படி, 'டாக்ஸிக்' படம் இதுவரை உலகளவில் 338 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட வசூலை எட்டுவதற்கு இன்னும் 7 கோடி ரூபாய் மட்டுமே தேவை. இந்தியாவில் இருந்து மட்டும் இந்தப் படம் 293 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Toxic : டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன் தாஸை ட்ரோல்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிளாப் ஆன டாக்ஸிக்
Image Credit : Instagram

பிளாப் ஆன டாக்ஸிக்

நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தாலும் அவர்களை இயக்குநர் சரிவர பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். பல கோடிகளை கொட்டி ஒரு அடல்ட் படத்தை எடுத்திருக்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு படத்தில் 18 ப்ளஸ் காட்சிகள் எக்கச்சக்கம் உள்ளன. கேஜிஎஃப் படத்தில் யாஷை பார்த்து சிலாகித்துப் போய் இந்த படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு டாக்ஸிக் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் இப்படம் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

Toxic Review : யாஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ

Related Articles

Related image1
Toxic : ஜனநாயகன் ரெக்கார்டு காலி! பாக்ஸ் ஆபிஸில் 'டாக்ஸிக்' சுனாமி! முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்?
Related image2
Toxic OTT Release : டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ் எப்போது? யஷ் படத்தை 235 கோடிக்கு வாங்கிய டிஜிட்டல் தளம் எது?
34
டாக்ஸிக் ஓடிடி டீல் என்னாச்சு?
Image Credit : instagram

டாக்ஸிக் ஓடிடி டீல் என்னாச்சு?

இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் ஓடிடி டீல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஓடிடி தளம் ஒரு புதிய ஆஃபரை முன்வைத்துள்ளது. படம் ரிலீஸாவதற்கு முன்பே, ஒரு முன்னணி ஓடிடி தளம் 200 கோடி ரூபாய் ஆஃபர் கொடுத்தது. 150 கோடியில் தொடங்கிய பேச்சுவார்த்தை 200 கோடி வரை சென்றது. ஆனால் 'டாக்ஸிக்' படக்குழு இந்த ஆஃபரை நிராகரித்துவிட்டது. படத்தின் மீதிருந்த நம்பிக்கையால், படம் ரிலீஸ் ஆன பின்னர் அதைவிட கூடுதல் விலைக்கு விற்கலாம் என்கிற பேராசையில் இருந்திருக்கிறார்கள்.

Toxic : 300 கோடியை தாண்டிய டாக்சிக்... ஆனா 6-ம் நாள் வசூல் செம டிராப்! எவ்வளவு தெரியுமா?

44
ஓடிடியில் விழுந்த பேரிடி
Image Credit : instagram

ஓடிடியில் விழுந்த பேரிடி

ஆனால் நிலைமை தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. படம் எதிர்பார்த்த வசூலை பெறாததால், தற்போது ஓடிடி தளம் வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே ஆஃபர் செய்துள்ளதாக 'பாலிவுட் ஹங்காமா' செய்தி வெளியிட்டுள்ளது. இது படக்குழுவுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தற்போதைய தகவல்படி, 'டாக்ஸிக்' படத்தின் ஓடிடி டீல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது குறித்து படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. பல ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது படக்குழுவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Toxic : விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட லைஃப்டைம் வசூல் சாதனையை 5 நாளில் ஊதித்தள்ளிய யாஷின் ‘டாக்ஸிக்’

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
டாக்சிக் யாஷ் திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Recommended image2
OTT : போலீஸ்காரரே திருடனா மாறினா என்னாகும்? ஓடிடியில் இப்படி ஒரு அடிபொலி த்ரில்லர் படமா?
Recommended image3
Movie Interval: மூவிக்கு நடுவே ஏன் “Interval”? வெறும் பாப்கார்னுக்காக இல்லை.. பின்னால் இருக்கும் சுவாரஸ்ய காரணம்!
Related Stories
Recommended image1
Toxic : ஜனநாயகன் ரெக்கார்டு காலி! பாக்ஸ் ஆபிஸில் 'டாக்ஸிக்' சுனாமி! முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்?
Recommended image2
Toxic OTT Release : டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ் எப்போது? யஷ் படத்தை 235 கோடிக்கு வாங்கிய டிஜிட்டல் தளம் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved