OTT : போலீஸ்காரரே திருடனா மாறினா என்னாகும்? ஓடிடியில் இப்படி ஒரு அடிபொலி த்ரில்லர் படமா?
OTT Must Watch Movie : நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் கிரி, தன் உயர் அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு கொலை வழக்கின் விசாரணை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே இந்த படத்தின் கதை.

OTT Must Watch Movie
சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், த்ரில்லர் படங்களை விரும்புபவரா நீங்க? அப்போ இது உங்களுக்கு சரியான சாய்ஸ். ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த மலையாளப் படம், 2022-ல் வெளியானது. இந்த படத்தை நீங்க OTT-யில் பார்க்கலாம். கேரளா-தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்துலதான் கதை தொடங்குது. அங்கே இருக்கிற ஒரு சின்ன போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்க்குற கான்ஸ்டபிள் கிரி-யை சுத்திதான் மொத்த கதையும். கிரி ரொம்ப நேர்மையான, புத்திசாலியான போலீஸ்காரர்.
கதை என்ன?
ஒருமுறை, உயர் அதிகாரியால் கிரி மோசமாக அவமானப்படுத்தப்படுகிறார். அதிலிருந்து படத்தின் கதைக்களம் மாறத் தொடங்குகிறது. கிரி-யின் சிந்தனையும் வாழ்க்கையும் வேறு திசையில் பயணிக்கிறது. படத்தின் இரண்டாம் பாதி, ஒரு கொலை வழக்கின் விசாரணையை மையமாக வைத்து நகர்கிறது. ஆசிஃப் அலி, கிரி கேரக்டரில் கிரே-ஷேடில் மிரட்டியிருப்பார். 153 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் பெயர் 'கூமன்'. ஆசிஃப் அலி, ஆல்வின் ஆண்டனி, ரெஞ்சி பணிக்கர், ஹன்னா ரெஜி, ஜாஃபர் இடுக்கி, பாபுராஜ் என பலர் இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளனர். K.R.கிருஷ்ணகுமார் எழுதிய கதைக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் உயிர் கொடுத்திருக்கிறார்.
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
IMDb-யில் இந்த படத்துக்கு 7.3 ரேட்டிங் கொடுத்திருக்காங்க. கிரி-க்கு வேலை போகுமா? விசாரணை எப்படி முடியும்? போன்ற கேள்விகள் உங்களை கடைசி வரை சீட் நுனியில் உட்கார வைக்கும். இந்த படம் பிரைம் வீடியோவில் இருக்கிறது, நீங்க பார்க்கலாம். 'த்ரிஷ்யம்' சீரிஸ் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியதில் ஒரு அண்டர் ரேட்டட் படமாக இருக்கின்றது. அனன்யா ஃபிலிம்ஸ் பேனரில் ஆல்வின் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் குரூப் கவனித்துள்ளார். மோகன்லால் நடிக்கும் '12த் மேன்' படத்திற்கு கதை எழுதிய கே. ஆர். கிருஷ்ணகுமார்தான் 'கூமன்' படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
கூமன் படக்குழு
படத்திற்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைக்க, வி. எஸ். விநாயக் படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை விநாயக் சசிகுமார் எழுதியுள்ளார். லிண்டா ஜீத்து ஆடை வடிவமைப்பாளராகவும், ராஜீவ் கொல்லம் கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடைசியாக 'த்ரிஷ்யம் 3' வெளியானது. மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் ஆகியோர் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. த்ரிஷ்யம் போல் கூமன் படமும் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் மிஸ் பண்ணாம பாருங்கள்.
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

