MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT Releases : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?

OTT Releases : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?

OTT Release Movies and Web Series : விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற செப்டம்பர் 14ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பற்றி பார்க்கலாம்.

5 Min read
Author : Ganesh A
Published : Sep 07 2026, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
This Week OTT Releases
Image Credit : Sithara Entertainments, Super Good Films

This Week OTT Releases

செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விதவிதமான கதையம்சம் கொண்ட புதுவரவுகளால் களைகட்டப் போகிறது. ஹாரர் காமெடி, க்ரைம் த்ரில்லர், ரொமான்ஸ், ஸ்போர்ட்ஸ் டிராமா, பீரியட் டிராமா, காமெடி என பல்வேறு ஜானர்களில் புதிய படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாக உள்ளன.

குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்த வாரம் பல சுவாரஸ்யமான படைப்புகள் வெளியாகின்றன. இதனுடன் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் ரசிகர்களை கவரும் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வரவுள்ளன. செப்டம்பர் 8 முதல் 11-ம் தேதி வரை எந்தெந்த படங்கள் மற்றும் சீரிஸ்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பதைப் பார்க்கலாம்.

OTT Release issue: 8 வார OTT Window விவகாரம் என்ன? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : X

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons)

சூர்யாவின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. அப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் ராதிகா, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த அப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்திருந்தது. திரையரங்குகளில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் செப்டம்பர் 11ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

நார்த் ஆஃப் நார்த் சீசன் 2 (North of North Season 2)

ஆர்க்டிக் பகுதியில் உள்ள சிறிய நகரத்தில் வாழும் இளம் பெண் ஒருவர், தனக்குப் பழக்கமான வாழ்க்கையை விட்டு வெளியேறி புதிதாக தனது எதிர்காலத்தை அமைக்க முயற்சிக்கிறார். திருமண வாழ்க்கையில் இருந்து எதிர்பாராத விதமாக விலகும் அவர், அதன்பிறகு சந்திக்கும் சவால்களையும் புதிய வாழ்க்கையை உருவாக்கும் போராட்டத்தையும் இந்தத் தொடர் மையமாகக் கொண்டுள்ளது. இந்த வெப் தொடர் செப்டம்பர் 8ந் தேதி நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.

டிரான் டுகெதர் (Drawn Together)

பெரும் செல்வந்தரின் மகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட பிறகு, அவரது வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. அவரது பாதுகாப்புக்காக பாடிகார்டாக ஒருவர் நியமிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் இருந்தாலும், காலப்போக்கில் அந்த உறவு வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பாதுகாப்பு பொறுப்பாக தொடங்கும் உறவு எப்படி காதலாக மாறுகிறது என்பதே கதையின் முக்கிய அம்சம். இது பிரைம் வீடியோவில் செப்டம்பர் 9ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

வை டிட் ஐ கெட் மேரிட் அகெய்ன்? ( Why Did I Get Married Again?)

பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் தம்பதிகள், இத்தாலியின் அழகிய லேக் கோமோவில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மீண்டும் ஒன்று கூடுகின்றனர். இந்த சந்திப்பின்போது அவர்களது பிள்ளைகள் எதிர்கொள்ளும் காதல் மற்றும் திருமணம் சார்ந்த சிக்கல்கள், நண்பர்களை தங்களது சொந்த உறவுகளையும் கடந்த கால முடிவுகளையும் மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. குடும்ப உறவுகள், காதல் மற்றும் திருமண வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை பேசும் இந்தப் படைப்பு செப்டம்பர் 9, அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

35
ஓடிடிக்கு வரும் மகுடம்
Image Credit : X

ஓடிடிக்கு வரும் மகுடம்

மகுடம் (Magudam)

விஷால் ஹீரோவாக நடித்த படம் மகுடம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரித்து இருந்தது. இப்படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராகவும் அறிமுகமானார். இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் விஷால் உடன் துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி தியேட்டரில் பிளாப் ஆனது. இப்படம் வருகிற செப்டம்பர் 11ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

க்ரூ கேர்ள் (Crew Girl)

ரோயிங் விளையாட்டில் திறமையான இளம் வீராங்கனையாக உருவெடுத்து வரும் டீகன் டாவோவின் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது. அவரது குடும்பத்தை பாதிக்கும் நிதி மோசடி காரணமாக வாழ்க்கையே தடம் மாறுகிறது. புதிய பள்ளியில் சேரும் அவருக்கு அங்கு பெண்களுக்கான ரோயிங் அணி இல்லாதது மற்றொரு சவாலாக அமைகிறது. தனது விளையாட்டு கனவை கைவிடாமல் அதை அடைவதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே கதையின் மையம். செப்டம்பர் 10 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.

கால் மை ஏஜென்ட் தி மூவி (Call My Agent The Movie)

டேலண்ட் ஏஜென்சி பணியை விட்டுவிட்டு இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய பாதையில் பயணிக்கும் ஆண்ட்ரியா மார்டெல்லின் முதல் திரைப்பட முயற்சியில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. படத்தின் முக்கிய நடிகர் திடீரென விலகியதால், அவர் மீண்டும் தனது பழைய ஏஜென்சி உலகிற்குள் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. சினிமா உலகின் பின்னணி, நட்சத்திரங்களின் பிரச்சினைகள் மற்றும் ஏஜென்சி உலகின் பரபரப்பை நகைச்சுவையுடன் சொல்லும் இந்தப் படம் செப்டம்பர் 10, அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

சும்பக் (Chumbak)

ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் ஐந்து குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்ட நகைச்சுவைத் தொடர் இது. தனியுரிமைக்கு அதிக இடமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பில், அண்டை வீட்டில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம் கூட பல குடும்பங்களை பாதிக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

குடும்ப உறவுகள், அண்டை வீட்டாரின் தலையீடு மற்றும் அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடர் செப்டம்பர் 10, அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

45
ஓடிடியில் இந்த வாரம்
Image Credit : Asianet News

ஓடிடியில் இந்த வாரம்

தி ரெவல்யூஷனரீஸ் (The Revolutionaries)

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய இளம் புரட்சியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பீரியட் வெப் சீரிஸ் இது. அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள், துணிச்சலான போராட்டங்கள் மற்றும் நாட்டிற்காக செய்த தியாகங்கள் ஆகியவற்றைத் திரையில் கொண்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மற்றொரு முக்கியமான அத்தியாயத்தைப் பேசும் இந்தத் தொடர் செப்டம்பர் 11 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

கோ டீம்! (Go Team)

ஸ்பெயினில் ஒரு காலத்தில் வெற்றிகரமாக இயங்கி வந்த சீஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்குகிறது. இதனால் ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாகம் ஒரு குழு உருவாக்கும் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. ஆனால், நிறுவனத்தில் விரைவில் ஆட்குறைப்பு நடைபெற இருப்பதாக ஊழியர்களுக்குத் தெரியவருகிறது. இதனால் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமைக்கு பதிலாக கடும் போட்டி உருவாகிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதே கதையின் சுவாரஸ்யம். செப்டம்பர் 11 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

ஸ்டோலன் ஹார்ட்பீட்ஸ் (Stolen Heartbeats)

தனது மனைவியின் மரணத்துக்கு காரணமான உறுப்பு திருட்டுக் கும்பலை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நபர் தீவிரமாக தேடுதல் நடத்துகிறார். அந்த விசாரணையின் போது, தனது மனைவியின் இதயம் பொருத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக்குள் அவர் எதிர்பாராத விதமாக நுழைகிறார்.

இருவருக்கும் இடையே காதல் உருவாகத் தொடங்கும் நிலையில், அவர்களை இணைக்கும் அதிர்ச்சிகரமான உண்மை இருவருக்குமே தெரியாமல் இருக்கிறது. காதல், பழிவாங்குதல் மற்றும் மர்மம் கலந்த இந்தத் தொடர் செப்டம்பர் 11, அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

55
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

பஞ்சநாமா (Panchanama)

சிக்கலான குற்ற வழக்கைச் சுற்றி நகரும் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் தொடர் இது. விசாரணை முன்னேறும்போது ஒவ்வொரு தடயமும் புதிய மர்மங்களை உருவாக்குகிறது.

வழக்கின் பின்னணியில் இருக்கும் ஊழல், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருகின்றன. குற்ற விசாரணையை மையமாகக் கொண்ட பரபரப்பான கதைக்களத்தை விரும்புபவர்களுக்கு இந்தத் தொடர் கவனம் ஈர்க்கும். செப்டம்பர் 11 முதல் ஜீ5-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

கமாசான் (Ghamasaan)

நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யாவுக்கு, செல்வாக்கு மிக்க தாதா மஹாராஜை கட்டுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது ஒரு காவல் அதிகாரிக்கும் குற்றவாளிக்கும் இடையிலான மோதலாகத் தோன்றுகிறது.

ஆனால் விசாரணை செல்லச் செல்ல, இதன் பின்னணியில் அரசியல் அதிகாரம், பணபலம் மற்றும் செல்வாக்கு ஆகியவை பின்னிப் பிணைந்திருப்பதை ஆதித்யா புரிந்துகொள்கிறார். ஒரு தனி நபரை எதிர்கொள்வதல்ல, மிகப்பெரிய அதிகார அமைப்பையே எதிர்த்து போராட வேண்டிய சூழலில் அவர் சிக்குகிறார். செப்.11 முதல் ஜீ5ல் பார்க்கலாம்.

அலிபாபா ஆர் 40 பூத் (Ali Baba Aur 40 Bhoot)

குழந்தைப் பருவத்தில் பலரும் கேட்டிருக்கும் அலிபாபா மற்றும் 40 திருடர்கள் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட ஹாரர் காமெடி பின்னணியை இந்தத் தொடர் உருவாக்குகிறது. இதில் 40 திருடர்களுக்குப் பதிலாக 40 பேய்கள் இடம்பெறுகின்றன.

ஒரு நகைச்சுவை கலந்த போலீஸ் அதிகாரியும் அவரது நண்பரும் கிராமத்தில் தொடர்ந்து நிகழும் வினோதமான அமானுஷ்ய சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். பயத்துடன் நகைச்சுவையையும் கலந்து சொல்லும் இந்தத் தொடர் செப்டம்பர் 11, அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

பிரின்ஸ் ஆஃப் மாலிவுட் (Prince of Mollywood)

மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகராக வேண்டும் என்பது ஃபிரோஸின் மிகப்பெரிய கனவு. ஆனால் அவரது சொந்த தந்தையே அந்தக் கனவுக்கு தடையாக நிற்கிறார். மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் தந்தை, தனது மகன் சினிமா துறையில் நுழைவதை விரும்பவில்லை.

தந்தையின் எதிர்ப்பையும் குடும்ப பின்னணியில் இருக்கும் தடைகளையும் கடந்து, திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க ஃபிரோஸ் மேற்கொள்ளும் முயற்சிகளைச் சுற்றியே கதை நகர்கிறது. செப்டம்பர் 11 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 
6th T10 • ABDT10
Live
ARACARAC
(1.4 ov)25/0
RDCRDC
(10.0 ov)112/6
ARAC need 88 runs in 50 balls
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
‘கில்லி’ விஜய்யின் தந்தை... 55 வயசுல விவாகரத்து, 60 வயதில் 2வது கல்யாணம் செய்தது ஏன்? ஆசிஷ் வித்யார்த்தி விளக்கம்!
Recommended image2
Ramayana Box Office Collection Day 3: ரூ.4,000 கோடி பட்ஜெட், வசூல் இவ்வளவு தானா?; பாக்ஸ் ஆபீஸில் ஆமை வேகத்தில் நகரும் ராமாயணா!
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
OTT Horror Movie : மர்ம சாலை... மாயமாகும் பயணிகள்; மிரள வைக்கும் இந்த பேய் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க...!
Recommended image2
OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved