MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT Release issue: 8 வார OTT Window விவகாரம் என்ன? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?

OTT Release issue: 8 வார OTT Window விவகாரம் என்ன? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?

OTT Release issue: Theatre-ல் வெளியான Movie எப்போது OTT-க்கு வரும்? 4 வாரம், 8 வாரம் Theatrical Window என்றால் என்ன? இந்த Gap ஏன் முக்கியம் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 05 2026, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை என்ன
Image Credit : pinterest

திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை என்ன

செப்டம்பர் 1 முதல் புதிய பட வெளியீடுகள், படப்பிடிப்பு மற்றும் Post-Production பணிகளை நிறுத்துவதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) மற்றும் Tamil Film Active Producers Association (TFAPA) சமீபத்தில் அறிவித்த செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இதற்கு முக்கிய காரணாமாக, புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே OTT-யில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தாதாக கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
8 வார OTT Window விவகாரம் என்ன?
Image Credit : pinterest

8 வார OTT Window விவகாரம் என்ன?

ஒரு புதிய திரைப்படம் திரையரங்கில் வெளியாகும்போது, இதை OTT-ல் எப்போது பார்க்கலாம்? என்ற கேள்வி பல சினிமா ரசிகர்களுக்கு இருக்கும். முன்பெல்லாம் ஒரு படத்தை திரையரங்கில் பார்த்த பிறகு OTT-ல் வருவதற்கு சுமார் 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் கரோனா காலத்துக்குப் பிறகு இந்த இடைவெளி பல படங்களுக்கு 4 வாரங்களாகக் குறைந்தது. தற்போது மீண்டும் 8 வார theatrical window குறித்து திரையுலகில் தீவிரமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

Related Articles

Related image1
Movie Theater Etiquette: மூவி பார்க்க தியேட்டர் போறீங்களா? இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Related image2
Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
34
ஏன் 4 வாரம், 8 வாரம் என மாறுகிறது?
Image Credit : pinterest

ஏன் 4 வாரம், 8 வாரம் என மாறுகிறது?

ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி OTT-ல் வெளியாவதற்கு இடையிலான காலம் “Theatrical Window” என அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில்தான் படம் அதிகளவில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து, Box Office மூலம் அதிகபட்ச வருவாயை ஈட்ட முடியும்.

ஆனால், கரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால், தயாரிப்பாளர்களுக்கும், OTT நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் சில படங்கள் 4 வாரங்களுக்குள்ளேயே OTT-க்கு வந்தது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் ரசிகர்களும் சில வாரங்கள் காத்திருந்தால் வீட்டிலேயே ஓடிடியில் படத்தை பார்க்கலாம் என்ற மனநிலைக்கு மாறியதாக திரையரங்கு தரப்பினர் கருதுகின்றனர்

44
இப்போது ஏன் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பு?
Image Credit : pinterest

இப்போது ஏன் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பு?

2026-ல் தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் 8 வார OTT window என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், தமிழ் சினிமாவிலும் இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக தமிழ்நாடு அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால், ஒரு படம் எப்போது OTT-க்கு வரும்? என்பது வெறும் ரசிகர்களின் காத்திருப்பு விஷயம் மட்டுமல்ல. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், OTT நிறுவனம், ரசிகர்கள் என ஒட்டுமொத்த சினிமா வர்த்தகத்தையும் பாதிக்கும் முக்கியமான முடிவு என்பதே உண்மையாகும்.

குறிப்பு: இது பொதுவான கருத்து மட்டுமே. திரைப்படங்களின் OTT வெளியீட்டு தேதி, Theatrical Window மற்றும் அதுதொடர்பான விதிமுறைகள் ஆகியவை படம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

V
Vishnupriya
சினிமா
திரைப்படம்
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Censor Certificate: திரைப்படம் எப்படி சென்சார் சான்றிதழ் பெறுகிறது? முழு Process இதுதான்!
Recommended image2
Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
Recommended image3
Soori: 'என்கூட நடிக்க பல ஹீரோயின்ஸ் தயங்குனாங்க' நிராகரித்த நடிகைகள் பற்றி சூரி ஓபன் டாக்
Related Stories
Recommended image1
Movie Theater Etiquette: மூவி பார்க்க தியேட்டர் போறீங்களா? இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved