'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ள, திரைப்படங்களான 'பிரின்ஸ்' மற்றும் 'சர்தார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Leading companies have acquired the OTT rights of  Sardar and Prince movie

குழந்தைகளுக்கு தீபாவளி என்றதும் பட்டாசு, புத்தாடை, இனிப்பு, உறவினர்கள் வருகை, போன்றவை தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இளைஞர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது.. இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்த பிரபலத்தின் திரைப்படம் வெளியாகிறது என்பதுதான். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், ரஜினி, கமல், போன்ற உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Leading companies have acquired the OTT rights of  Sardar and Prince movie

மேலும் செய்திகள்: 7 வருட மகிழ்ச்சியான அனுபவம்... 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் நயனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த விக்கி!
 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். காமெடியை மட்டுமே மையமாக வைத்து வெளியாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு, வழக்கம்போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் இன்றைய தினம் வெளியான நிலையில், இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமம் மற்றும் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றி உள்ள நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  ஹாட் ஸ்டார் நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது. விஜய் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leading companies have acquired the OTT rights of  Sardar and Prince movie

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் களைகட்ட துவங்கிய காதல் விளையாட்டு..! உருவாகிறதா 2 காதல் ஜோடி?

'பிரின்ஸ்' படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியுள்ள நடிகர் கார்த்தியின் 'சர்தார்' படமும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை 'இரும்புத்திரை', 'ஹீரோ' போன்ற படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை, ஆஹா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். ஆனால் இந்த இரு படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios