7 வருட மகிழ்ச்சியான அனுபவம்... 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் நயனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த விக்கி!
இயக்குனர் விக்னேஷ் சிவன், 7 வருடம் முன்பு தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவுடன் 'நானும் ரவுடிதான்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் காதல் ஜோடிகளாக இருந்து, இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு... 4 மாதத்திலேயே குழந்தையும் பெற்றுக்கொண்ட சென்சேஷனல் ஜோடி தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாரா, பிரபு தேவா உடனான காதல் முறிவில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில் தான், இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தன்னுடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க அணுகினார்.
நயனின் அப்பாயின்ட்மென்ட் கிடைத்து, ஒரு வழியாக கதையை கூறியுள்ளார். நயன்தாராவிற்கு கதை மிகவும் பிடித்து போனதால், படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இந்த படத்தின் படப்பிடிப்பும் அமோகமாக துவங்கியது. சென்னை, பாண்டிச்சேரி என உள்ளூரிலேயே... மிக குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடித்தார். ஆனால் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, பெருத்த லாபத்தை தயாரிப்பாளர் தனுஷுக்கு பெற்று தந்தது.
மேலும் செய்திகள்: வெங்கட் பிரபு - நாகசைதன்யாவின் ‘NC 22’ படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!
இந்த படத்தில் நடிக்கும் போது... பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் பிரபுதேவா போலவே இருந்த விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் வந்தது. இவர்கள் இருவர் பற்றிய காதல் கிசு கிசு அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்த போதிலும், பின்னர் இருவருமே தங்களின் காதலை உறுதி செய்தனர். எனினும் திருமணம் எப்போது செய்து கொள்வார்கள் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஒருவழியாக இந்த ஆண்டு, ஜூன் 9 ஆம் தேதி நயன் - விக்கி திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையேடு, திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்த ஜோடி, பின்னர்... தாய்லாந்துக்கு ஹனி மூன் சென்றது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் களைகட்ட துவங்கிய காதல் விளையாட்டு..! உருவாகிறதா 2 காதல் ஜோடி?
ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்திய நயன் - விக்கி ஜோடி... மீண்டும் இரண்டாவது ஹனி மூனுக்கு ஐரோப்பா நாடுகளுக்கு சென்றது. விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கூட நயன் இந்த முறை துபாயில் தான் கொண்டாடி மகிழ்ந்தார். விரைவில் திரையுலகை விட்டு விலகி, குழந்தை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். இது குறித்த விவாதம் ஒரு புறம் சென்றுகொண்டிருந்தாலும், எதையும் துணிந்து சமாளிக்க தயாராக உள்ளது இந்த ஜோடி.
மேலும் செய்திகள்: பிக்பாஸில் நடந்த டுவிஸ்ட்! சண்டை போட்டவங்கள விட்டுட்டு... சைலன்டா இருந்தவங்கள தூக்கி ஜெயில்ல போட்ட ஹவுஸ்மேட்ஸ்
இந்நிலையில், விக்னேஷ் சிவன், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 'நானும் ரவுடி தான்' படத்தில் நயன்தாரா முன் விஜய் சேதுபதி பேசும் ஒரு வசனத்தை அவர் சொல்லி கொடுக்கிறார். நயன்தாரா இதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டு 7 வருட மகிழ்ச்சியான அனுபவம், இந்த படம் தனக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுத்ததாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- nayanthara
- nayanthara and vignesh shivan
- nayanthara baby
- nayanthara baby news
- nayanthara marriage
- nayanthara pregnant news
- nayanthara vignesh shivan
- nayanthara vignesh shivan baby
- nayanthara vignesh shivan baby video
- nayanthara vignesh shivan blessed baby boy
- nayanthara vignesh shivan latest video
- nayanthara vignesh shivan marriage
- vignesh shivan
- vignesh shivan nayanthara
- vignesh shivan nayanthara baby
- vignesh shivan nayanthara marriage video