வெங்கட் பிரபு - நாகசைதன்யாவின் ‘NC 22’ படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிவுக்கு வந்தது!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நாகசைதன்யா நடித்து வரும்   படத்தின் முக்கிய ஷெட்யூலின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Nagachaitanya starring NC22 movie important schedule wrapped

நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது. ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. 

Nagachaitanya starring NC22 movie important schedule wrapped

தற்போது இந்தப் படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிவந்துள்ளது. இதில் நடிகர் நாகசைதன்யாவும் பங்கேற்றிருக்கிறார். மைசூரின் அழகிய இடங்கள் இடங்களை சுற்றி இந்தபடத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் நாகசைதன்யா. மேலும், அவரது சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரக்கூடிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இசையில் மேதமைகளான அப்பா- மகன் இணை ‘மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

மேலும் செய்திகள்: பெற்றோருக்காக ரக்ஷிதா எடுத்த முடிவு..! மனதார பாராட்டும் ரசிகர்கள்..!
 

Nagachaitanya starring NC22 movie important schedule wrapped

மேலும் செய்திகள்: புது காரை காட்ட வந்த நடிகர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்.. என்ன செய்தார் தெரியுமா?
 

இந்த படத்தை  ’ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரின்’ பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். பவன்குமார் இந்தப் படத்தை  வழங்குகிறார். அபூரி ரவி படத்திற்கு வசனம் எழுத, SR கதிர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்க உள்ளது. குறிப்பாக, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி அமரன், ப்ரியாமணி உள்ள பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios