Sneha: சினேகா மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்! போட்டோஸ்..!
நடிகை சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது பர்த்டே செலிபிரேஷன் போட்டோஸ் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை சினேகா, ஒவ்வொரு வருடமும்... தன்னுடைய மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை மிகவும் விமர்சியாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக குழந்தைகளின், பிறந்தநாள் போது, முதியோர் மற்றும் ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய மகள் ஆத்யந்தா பிறந்தநாளை ஆசிரமத்தில் குழந்தைகளுடன் கொண்டாடிய வீடியோ ஒன்றை நேற்று சினேகா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தனக்கு மிகவும் நெருக்கமான தோழிகள், மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பிரமாண்ட பார்ட்டி வைத்து மகள் பிறந்தநாளை செலிபிரேட் செத்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்த பிறந்தநாள் பார்ட்டியில்... விஜயகுமாரின் மகள் அனிதா, ப்ரீத்தா, நடிகர் அசோக் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சினேகா தன்னுடைய மகளுக்கு மேட்சிங்காக பர்பிள் நிற உடையில் ஜொலிக்கிறார். நடித்தார் பிரசன்னா மற்றும் அவருடைய மகன் விகான் ஆகியோர் கிரே நிற ஷர்ட் அணிந்துள்ளதை பார்க்கமுடிகிறது. தற்போது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.