MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ரேஷ்மா! இனி ராதிகாவாக நடிக்க உள்ளது இந்த சர்ச்சை நடிகையா?

பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ரேஷ்மா! இனி ராதிகாவாக நடிக்க உள்ளது இந்த சர்ச்சை நடிகையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கிய லட்சுமி' சீரியலில் இருந்து ரேஷ்மா விலக உள்ளதாகவும், அவருக்கு பதில் பிரபல நடிகை ஒருவரிடம் ராதிகாவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 26 2023, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக திருமணமாகி குழந்தை பெற்ற பெண்களாலும்.. நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாக்கியலட்சுமி'.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ஒவ்வொரு வாரமும் டிஆர்பி யில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் இந்த சீரியலில், சுசித்ரா பாக்கியா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

புதிய வரலாறை உருவாக்கிய பதான்! ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!

37

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்த வருகிறார்.  இந்த கதாபாத்திரம் பாக்கியாவின் கணவர் கோபியின் இரண்டாவது மனைவியாகும். மேலும் சில வில்லத்தனத்தோடு இந்த கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது.

47

இந்த சீரியலில் ஏற்கனவே ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியல் இருந்து அதிரடியாக விலகினார். அதே போல் இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரம் வில்லியாக காட்டப்படும் என்பதாலேயே இந்த சீரியலை விட்டு விலக முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

வீர பாண்டிய கட்டபொம்மன் முதல்... துப்பாக்கி வரை! தேசப்பற்றை பறைசாற்றிய திரைப்படங்கள்..!

57

இவரைத் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வந்தவர் தான் பிக்பாஸ் பிரபலமும், சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள ரேஷ்மா. இதுவரை எத்தனையோ சீரியல்கள் இவர் நடித்திருந்தாலும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது 'பாக்கிய லட்சுமி' தொடர் தான். இந்த சீரியல்  ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

67

இந்நிலையில் ரேஷ்மாவுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும்,  கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து ரேஷ்மா எந்த ஒரு உறுதியான தகவலையும் வெளியிட வெளியிடவில்லை என்றாலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய கன்னட மேயர்.! செம்ம குஷியான ரசிகர்கள்!

77

மேலும் இந்த வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்திற்கு, புதிய ராதிகாவாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை வனிதா விஜயகுமாரை நடிக்க வைக்க, சீரியல் குழு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது பரபரப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image2
Now Playing
கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
Recommended image3
Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved