விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய கன்னட மேயர்.! செம்ம குஷியான ரசிகர்கள்!
தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தின் ரசிகர்களை, கன்னட நாட்டு மேயர் மரியன் மீட் வார்டு, தன்னுடைய சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களை உட்சாகமடைய செய்துள்ளது.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் வெளிநாடுகளிலும் தளபதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
தளபதியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், 'விஜய் மக்கள் இயக்கத்தை' சேர்ந்த ரசிகர்கள், செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து, விசாரிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலை பார்த்து தான், மனதார பாராட்டியுள்ளார் கன்னட மேயர் மரியன் மீட் வார்டு.
இந்த வீடியோவை, விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், உதவி தேவை படும் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் ரசிகர்கள் சரியான நேரத்தில் உதவி செய்து வருவதாக கூறியுள்ளார். கன்னடநாட்டு மேயரின் இந்த பாராட்டுக்கள், தன்னலம் பாராமல் உதவி செய்து வரும் விஜய் ரசிகர்களை உட்சாகமடைய செய்துள்ளது.
விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, 'வாரிசு' திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 11 நாட்களிலேயே 250 கோடி வசூல் செய்து விட்டதாக அதிகார பூர்வமாக தெரிவித்தது படக்குழு. சில தயாரிப்பாளர்கள் வாரிசு படத்தின் வசூல் குறித்தும், சர்ச்சையை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள, 67 ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகி வரும் நிலையில், நாளைய தினம் தளபதி 67 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.