குட்டி மகள் மற்றும் காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் ஸ்ரேயா..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை ஸ்ரேயா தற்போது தன்னுடைய கியூட் மகள் மற்றும் கணவருடன் நீச்சல் குளத்தில் சந்தோஷமாக ஆட்டம் போடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தின் மூலம், இரண்டாவது நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஸ்ரேயா காட்டிய கவர்ச்சிக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக விக்ரமுக்கு ஜோடியாக கந்தசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற சேலையை காற்றில் பிறக்க விட்டு... 'லிகர்' பட புரோமோஷனில் பாலிவுட்டை தெறிக்க விட்ட ரம்யா கிருஷ்ணன்!
மேலும், தனுஷ், ஜெயம் ரவி போன்ற ஹீரோக்களுடனும் நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இடம்பிடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் ஸ்ரேயா தொடர்ந்து நடித்து வந்தார். சமீபத்தில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'RRR' படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: பஞ்சு போன்ற மேனியை... பளீச் என காட்டி மாடர்ன் உடையில் மயக்கும் அதிதி ஷங்கர்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு சில நிமிடங்கள் வந்து போனாலும்... உணர்ச்சிகளை கொட்டி நடித்திருந்தார். எனவே இவருடைய இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா கைவசம் தற்போது, 5 படங்கள் உள்ளது.
மேலும் செய்திகள்: அடுத்தவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசு தேவையா? பயில்வானை பங்கம் செய்த கலா மாஸ்டர்!
தமிழில் நரகாசுரன், மற்றும் சண்டைக்காரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் இரண்டு ஹிந்தி படங்களிலும் ஒரு கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் பொழுதை ஜாலியாக கழித்து வரும் இவர், நீச்சல் குளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் போட்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.