பஞ்சு போன்ற மேனியை... பளீச் என காட்டி மாடர்ன் உடையில் மயக்கும் அதிதி ஷங்கர்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
அதிதி ஷங்கர் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது இவர் செம்ம ஸ்டைலிஷ் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் புதுவரவு ஹீரோயினான, அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகியுள்ள 'விருமன்' திருப்பிடம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தன்னுடைய முதல் படத்தில், மாடர்ன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்காமல்... பாவாடை தாவணியில் கலக்கும் தேன்மொழியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில், கதாநாயகியாக மட்டும் இன்றி, யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு மதுர வீரன் என்கிற பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். மேலும் முதல் படம் வெளியாகும் முன்னரே அம்மணிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற சேலையை காற்றில் பிறக்க விட்டு... 'லிகர்' பட புரோமோஷனில் பாலிவுட்டை தெறிக்க விட்ட ரம்யா கிருஷ்ணன்!
'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கி, படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு திரைப்படம் கூட இன்னும் வெளியாகாத நிலையில், இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதற்கு நேபோட்டிசம் தான் காரணம் என சில நடிகைகள் மறைமுகமாக தாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகள்: அடுத்தவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசு தேவையா? பயில்வானை பங்கம் செய்த கலா மாஸ்டர்!
அதே போல் இவருடைய சம்பளமும், மற்ற அறிமுக நடிகைக்கு கொடுக்கப்படுவதை விட அதிகம் என கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க... அதிதி ஷங்கர் மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அழகில் மிரள வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...