சல்லடை போன்ற சேலையை காற்றில் பிறக்க விட்டு... 'லிகர்' பட புரோமோஷனில் பாலிவுட்டை தெறிக்க விட்ட ரம்யா கிருஷ்ணன்!
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா படமான 'லிகர்' திரைப்படத்தின் புரமோஷனின் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'லிகர்' திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளது.
தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் தேவாரகொண்டா குத்து சண்டை வீரராக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: அடுத்தவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசு தேவையா? பயில்வானை பங்கம் செய்த கலா மாஸ்டர்!
விஜய் தேவரைகோண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அமெரிக்கா குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார். இது இந்திய சினிமாவில் அவரது முதல் திருப்பிடம் ஆகும்.
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து 'பான்' இந்தியா படமாக படக்குழு இப்படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா தன்னுடைய உடல் எடையை கூட்டியும், குறித்தும் பல்வேறு வேறுபாடு காட்டி நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: திடீர் என கோவிலுக்கு விசிட் அடித்த விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள்..! வைரலாகும் போட்டோஸ்..!
அவரது திரையுலக பயணத்தில் ஏற்கனவே பல வெற்றி படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார்.
அதே போல், பாகுபலி படத்திற்கு பின்னர் மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். படத்தின் ட்ரைலரிலேயே சில காட்சிகளில் தன்னுடைய மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் செய்திகள்: 'கடாவர்' படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்தனர்... செய்தியாளர் சந்திப்பில் அமலா பால் ஆதங்கம்!
இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இப்படம் வெளியாகி உள்ள நிலையில், இன்று மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழு கலந்து கொண்டுள்ளது.
இயக்குனர், விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்...
மேலும் செய்திகள்: தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?
இந்த புரோமோஷனின் நடிகை ரம்யா கிருஷ்ணன் சல்லடை போன்ற சேலையில் வந்து ரசிகர்களை வசீகரித்தது மட்டும் இன்றி, சேலையை காற்றில் பறக்க விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...