- Home
- Cinema
- தவறான ரசிகர்கள் கணிப்பு! கடைசியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தவறான ரசிகர்கள் கணிப்பு! கடைசியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எதிர்பாராத போட்டியாளர் வெளியேறி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ஆர்மியை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 60வது நாட்களை, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எட்டி உள்ளதால்... டாஸ்க்கள் கடுமையாகிக் கொண்டே செல்கிறது.
எனவே போட்டியாளர்களும், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்கிற முனைப்புடன் போட்டி போட்டு கொண்டு, காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் தங்களுடைய விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
தளபதி அதை தான் பண்ண கூடாதுனு சொன்னார்..! அடங்காத ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர் வைரல்..!
அந்த வகையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மிகவும் குறைவான வாக்குகளை பெற்ற, கிரிக்கெட் வீரரும், மாடலுமான ராம் மற்றும் 'சத்யா' சீரியல் நடிகை ஆயிஷா ஆகியோர் வெளியேறினர்.
எனவே இந்த வார முடிவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், இது குறித்த தகவல் தற்போது வெளியாகி பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில், அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன், ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில், குறைவான வாக்குகளுடன் மணிகண்டன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்து கூறி வந்தனர்.
மேலும் வழக்கம்போல் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று அசீம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் விக்ரமன், மூன்றாவது இடத்தில் ஏடிகே ஆகியோர் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த முறை ரசிகர்களின் கணிப்பு தவறாகிப் போய் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி போட்டு விளையாடி வந்த ஏடிகே தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும், மணிகண்டன் ரக்ஷிதா ஆகியோர் நூல் இழையில் இந்த வாரம் ஏவிக்ஷனில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அசீமுடன் காரசாரமான விவாதங்களுடன், மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வந்த போட்டியாளரான ஏடிகே குறைவான வாக்குகளுடன் வெளியேற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.