நடிகர் அஜித் தன்னுடைய முதல் கட்ட பயணத்தை முடித்து விட்டதாக அவருடைய மேலாளர், சுரேஷ் சந்திரா போட்டுள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், 'வலிமை' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது 'துணிவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து... 'நேர்கொண்ட பார்வை', 'துணிவு' ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால்... இவருடைய மூன்றாவது படமும் ஹார்டிக் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி, வெளியாக உள்ளது. மேலும் இதே பொங்கல் பண்டிகையை குறிவைத்து... ஜனவரி 12 ஆம் தேதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுமே மிகவும் முக்கியப்படங்கள் என்பதாலும், அஜித் - விஜய் என இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதால், திரையரங்கம் விஷயத்திலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது அஜித்தின் மற்றொரு சாதனை குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, பைக் ரைடிங் பிரியரான அஜித், சமீப காலமாக, இந்தியா மற்றும் உலக நாடுகளில்... பைக் ரைடு செய்து வந்த நிலையில், தற்போது இந்தியாவில் சுற்று பயணத்தை முடித்துள்ளாராம்.
2022 ஆம் ஆண்டில்... அரிய வகை நோயால் பாதிக்க பட்ட சமந்தா, பூனம் கவுர் உள்ளிட்ட 5 பிரபலங்கள்!

இதுகுறித்து சற்றுமுன், அவரின் மேலாளர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, நடிகர் அஜித்தின் உலகம் சுற்றும் பயணத்தில் முதல் பாகத்தை அவர் முடித்து விட்டதாகவும், பெருமையுடன் அறிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் அணைத்து மாநிலங்களின் வாயிலாகவும் பயணித்ததன் மூலம் அஜித்தின் பயணம் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அஜித் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு ரசிகர்கள் அன்பு ஏராளமாக கிடைத்ததாகவும். இது அனைத்து ரைடர்களுக்கும் மிகவும் பெருமையான தருணம் என கூறியுள்ளார். அதே போல் துணிவில்லாமல் வெற்றி இல்லை என இவர் போட்டுள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
