43 வயதில்... நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் நடிகை பூமிகா! வைரல் போட்டோஸ்!
நடிகை பூமிகா கருப்பு நிற டைட் உடை அணிந்து, நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'பத்ரி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து.. ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக, 'ரோஜா கூட்டம்', சூர்யாவுக்கு ஜோடியாக 'சில்லுனு ஒரு காதல்' போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும், தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பூமிகா, கடைசியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான 'கொலையுதிர் காலம்' படத்தில் நடித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டில்... அரிய வகை நோயால் பாதிக்க பட்ட சமந்தா, பூனம் கவுர் உள்ளிட்ட 5 பிரபலங்கள்!
மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வபோது விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் செய்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது பூமிகா நீச்சல் குளத்தில், கருப்பு நிற டைட் உடை அணிந்து குளிப்பது போன்று வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
43 வயதிலும் நிலை குலையாத அழகில், நடிகை பூமிகா இருப்பதாக இவரை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர். மேலும் இவருடைய இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு வைரலாகி வருகிறது.