தளபதி அதை தான் பண்ண கூடாதுனு சொன்னார்..! அடங்காத ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர் வைரல்..!
அஜித் - விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் 'துணிவு' படத்திற்கு சவால் விடும் விதமாக விஜய்யின் மதுரை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும் கூட, சில சமயங்களில் இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கும் செட் ஆவதே இல்லை. சமூக வலைத்தளத்தில், அஜித்தின் ரசிகர்கள் விஜய் ரசிகர்களையும், விஜயின் ரசிகர்கள் அஜித் ரசிகர்களையும் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் இந்த வருட பொங்கல் திருவிழாவிற்கு, இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் சொல்லவா வேண்டும், போஸ்டர் அடித்து நேரடியாக 'துணிவு' படத்திற்கு சவால் விட்டுள்ளனர் மதுரை ரசிகர்கள்.
இந்த போஸ்டர் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சமீபத்தில் பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில், விஜய் மக்கள் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்த போது, நலப்பணி திட்டங்கள் குறித்து விவாதித்தது மட்டும் இன்றி, தன்னை வருங்கால முதல்வரே... அரசியல் தலைவர்களின் கெட்டப்பில் போட்டோ ஷாப் செய்து போஸ்டர் ஓட்ட வேண்டாம் என கண்டித்ததாக கூறப்பட்டது.
எனவே இப்போது சற்று வித்தியாசமாக, துணிவு படத்திற்கு சவால் விடும் விதமாக... "பணிவா சொன்னா ஏத்துக்கலாம்... துணிவா நின்னா வா பாத்துக்கலாம்'.... எங்கிற வரிகளோடு போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் ட்ரெண்ட் செய்யப்பட்டு, அஜித் ரசிகர்களின் கோபங்களும் ஆளாகி வருகிறது.
ஏற்கனவே அஜித்தை விட விஜய் தான் நம்பர் 1 ஹீரோ எனவே அவருடைய படத்திற்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் கூறியதற்கு, அஜித் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள, துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதியும், வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.