கவர்ச்சியை குறைத்து கொண்ட ராஷ்மிகா... குட் பை ப்ரோமோஷன் போட்டோஸ் இதோ
ப்ரோமோஷன் விழாக்களில் துருதுருவென கலந்து கொள்ளும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளம் முழுவதும் உள்ளது.
Rashmika Mandanna
குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழை அடைந்தவர் என்றால் அவர் ராஷ்மிகா மந்தனா தான். கீதா கோவிந்தம் என்னும் படத்தின் மூலம் தமிழ்ரசிகர்களுக்கு அறிமுகமானார் ராஷ்மிகா.
Rashmika Mandanna
இந்த படத்தில் விஜய் தேவார கொண்டவுடன் இவரது ஜோடி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விட்டது. இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...மும்பையில் செட்டிலாகி விட்ட ஜோதிகா..வைரல் போட்டோஸ் இதோ
Rashmika Mandanna
இந்த படத்தையடுத்து மீண்டும் டியர் காம்ரேட் படத்திலும் விஜய் தேவரகொண்ட உடன் ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
பிரபாஸின் இந்த படங்கள் கட்டாயம் 1400 கோடிகளை குவிக்கும்...பாகுபலி நாயகனின் வரவுகள் இதோ
Rashmika Mandanna
பின்னர் ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் மூலம் இங்கு வலம் வந்து கொண்டிருந்தார் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு என்ட்ரி ஆகிவிட்டார். அந்த படத்தில் கிராமத்து நாயகி ருக்மணியாக தோன்றி ரசிகர்களை வசிகரித்திருந்தார்.
Rashmika Mandanna
அதே ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படம் இவருக்கு உலகநாயகி அந்தஸ்தை கொடுத்தது. அதிலும் கிராமத்து நாயகி ஸ்ரீவள்ளி வேடத்தில் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு பல மொழி வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன.
Rashmika Mandanna
தற்போது புஷ்பா 2 விலும் இவர் நடித்து வருகிறார் அதோடு தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்கும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கபட்டு விட்டது.
Rashmika Mandanna
மேலும் ஹிந்தியில் குட் பாய், மிஷன் மஜ்ணு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதில் அமிதாபச்சனுடன் இவர் நடித்துள்ள குட் பை ப்ரோமோஷன் தடபுடலாக நடைபெற்று வருகிறது. ப்ரோமோஷன் விழாக்களில் துருதுருவென கலந்து கொள்ளும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளம் முழுவதும் உள்ளது
Rashmika Mandanna
முன்னதாக தனது சேலையை சரி செய்த பிறகு புகைப்படம் எடுக்குமாறு அவர் கூறியிருந்த வீடியோக்கள் வைரலான நிலையில், தற்போது டி ஷர்ட்டும் ஜீன்ஸ் அணிந்து அவர் ப்ரமோஷனுக்கு வந்திருந்த காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதியாக சீதாராமம் படத்தில் முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா தோன்றியிருந்தார்.