பிரபாஸின் இந்த படங்கள் கட்டாயம் 1400 கோடிகளை குவிக்கும்...பாகுபலி நாயகனின் வரவுகள் இதோ
பாகுபலியை அடுத்து வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை கண்டன. இந்நிலைகள் வரவிருக்கும் படங்கள் கட்டாயம் 1400 கோடிகளை அடித்தே தீரும் என தயாரிப்பாளர்கள் பெட் கட்டியுள்ளனர்.
prabhas
பாகுபலி இரண்டு பாகங்கள் மூலம் தென்னக நாயகனாக மாறிவிட்டார் பிரபாஸ். இவர் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் பிரபல நடிகர்களில் ஒருவராக உள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதோடு மிகப் பெரிய பட்ஜெட்டில் தான் இவரது ஒவ்வொரு படமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. பாகுபலியை அடுத்து வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை கண்டன. இந்நிலையில் வரவிருக்கும் படங்கள் கட்டாயம் 1400 கோடிகளை அடித்தே தீரும் என தயாரிப்பாளர்கள் பெட் கட்டியுள்ளனர். அதிக பட்ஜெட்டில் தயாராகும் பிரபாஸ் படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்...
prabhas
500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ஆதி புருஷ். இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடித்து வருகிறார். புராண கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இதில் நடிப்பதற்காக பிரபாஸ் 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஓம் ரவுத்தின் இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாக உள்ள படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?...பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்ட அப்டேட்
prabhas
இதைத்தொடர்ந்து அஸ்வினி நாக் இயக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடி என கூறப்படுகிறது. இதில் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சனுடன் முதல் முறையாக நடிக்கிறார் பிரபாஸ். பாலிவுட் பிரபலங்களுடன் வெளியாகவுள்ள இந்த படம் கட்டாயம் ஆயிரம் கோடிகளை வசூலிக்கும் என கூறப்படுகிறது.
prabhas
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸ் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி முடிவடைந்துள்ளது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...பராம்பரிய உணவுடன் ஆயுதபூஜை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..
prabhas
இயக்குனர் மாருதியின் ராஜா டீலக்ஸ் என்னும் படத்திலும் பிரபாஸ் ஒப்பந்தமாக உள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் திகில் கலந்த கதைக்களத்தை கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.
பிரபாஸ் இதுவரை சுமார் 19 படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல பிளாக்பஸ்டர் படங்களையும் கொடுத்திருக்கிறார். ராஜமவுளியின் பாகுபலி படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்து உலக நாயகனாக மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.