தமிழ்நாட்டில் மட்டும் பொன்னியின் செல்வன் ரூ.100 கோடிகளை வசூலித்துள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் தற்போது திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் சோழ வம்ச இளவரச இளவரசிகளாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளனர். படம் வெளியான சில நாட்களிலேயே 240 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி சினிமாவாக்கப்பட்டுள்ளது இந்த படம். இரு தலைமுறைகளாக பலரும் முயற்சித்த கனவை தற்போது நனவாக்கியுள்ளார் மணிரத்தினம். ஒருபுறம் புகழ் கூடினாலும், மறுபுறம் சிலர் இந்த படம் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் ராஜா ராஜா சோழனை இந்து அரசராக சித்தரித்து உள்ளனர் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி கொண்டார். கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...பராம்பரிய உணவுடன் ஆயுதபூஜை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..

YouTube video player

படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் பொன்னியின் செல்வன் ரூ.100 கோடிகளை வசூலித்துள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...வயிற்றில் குழந்தையுடன் அழகு தேவதையாய் ஆலியாபட்..வளைகாப்பு போட்டோஸ் இதோ

Scroll to load tweet…