தசரா பண்டிகையோடு ஆலியாவின் வளைகாப்பு விழாவும்  நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அனார்கலி சூட்டில் அழகு தேவதையாக அமர்ந்திருக்கிறார் ஆலியா.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர் - ஆலியாவின் திருமணம் குறித்த பேச்சு தான் முன்பெல்லாம். இவர்கள் நீண்ட நாட்களாக காதல் உறவில் இருந்தனர். இது குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவலாக இருந்தது.

இந்த ஜோடியின் திருமணம் அவர்களது வீட்டின் பால்கனியில் நடைபெற்றது. இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. பின்னர் கடந்த ஜூன் மாதம் இவர்களது முதல் குழந்தை வரவிருப்பது குறித்து சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர். பின்னர் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிய ஆரம்பித்தது.

மேலும் செய்திகளுக்கு...வண்ண வண்ண பிகினியுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியா வாரியார்...

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...ஸ்லீவ்லெஸ் சுடியில் பார்வைகளை பற்றிக்கொள்ளும் ரம்யா பாண்டியன்

சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திர படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இருவரும் வந்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதோடு கர்ப்பகால உடை குறித்தும் ஆலியா அவ்வப்போது அட்வைஸ் கொடுத்து வந்தார். 

View post on Instagram

இந்நிலையில் தசரா பண்டிகையோடு ஆலியாவின் வளைகாப்பு விழாவும் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அனார்கலி சூட்டில் அழகு தேவதையாக அமர்ந்திருக்கிறார் ஆலியா. ரன்பீர் கபூரின் வீட்டில் நடைபெற்ற விழாவில் பூஜா பட், ஷமீன் பட், ரன்பீரின் அம்மா நீத்து கபூர், கசின் கரிஷ்மா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

View post on Instagram