மும்பையில் செட்டிலாகி விட்ட ஜோதிகா..வைரல் போட்டோஸ் இதோ
2D தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலிவுட் படங்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ள இவர்கள் மும்பையிலேயே செட்டிலாகும் முடிவை எடுத்துள்ளனர் என தகவல் பரவி வருகிறது.
Jyothika
90களில் பிற்பகுதிகள் டாப் டென் நாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஜோதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு பார்த்துள்ளார். இவர் தேசிய விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, கலைமாமணி என எக்கச்சக்க விருதுகளையும் தன் கைவசம் வைத்துள்ளார்.
Jyothika
தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவருக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளமாக இருந்தது .தமிழில் விஜய், சூர்யா, ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ஜோதிகா.
பிரபாஸின் இந்த படங்கள் கட்டாயம் 1400 கோடிகளை குவிக்கும்...பாகுபலி நாயகனின் வரவுகள் இதோ
Jyothika
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவை காதல் கரம்பிடித்தார் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூனியர் மற்றும் சில்லுனு ஒரு காதல் என கிட்டத்தட்ட ஏழு படங்களில் ஜோடியாக நடித்த இவர் நடித்துள்ளார் ஜோதிகாஉள்ளிட்ட படங்களில் இருவரும் நடித்துள்ளனர்.
இந்த தம்பதிகளுக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது குடும்ப புகைப்படங்களையும் ஜோதிகா -சூர்யா வெளியிட்ட வருகின்றனர். அதோடு கணவருடன் இணந்து 2 டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஜோதிகா. இதன் மூலம் பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?...பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்ட அப்டேட்
Jyothika
சமீபத்தில் இவர்கள் தயாரித்த சூரரைப் போற்று படம் தேசிய விருதையும் வென்றெடுத்தது. படத்திற்காக சூர்யா மற்றும் ஜோதிகா விருது வாங்கிய புகைப்படங்களும் வைரலாக பரவியது. திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.
Jyothika
பின்னர் இவர் நடித்த 36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி, பொன்மகள் வந்தால், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்கள் நயகியாக இவர் நடித்த படங்களை காட்டிலும் புகழ் பெற்றது. தற்போது தயாரிப்பு நிறுவனத்தை பாலிவுட் வரை பரப்ப எண்ணிய இந்த சூர்யா - ஜோதிகா ஜோடி, தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வரும் சூரரைப் போற்றுப் படத்தை தயாரித்து வருகிறது.
Jyothika
அதோடு 2D தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலிவுட் படங்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ள இவர்கள் மும்பையிலேயே செட்டிலாகும் முடிவை எடுத்துள்ளனர் என தகவல் பரவி வந்த நிலையில், தற்போது ஜோதிகா மும்பை பொதுவெளியில் காணப்பட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.