முதன்முறையாக ஐட்டம் டான்ஸ் ஆடும் ராஷ்மிகா மந்தனா; அதுவும் யார் படத்தில் தெரியுமா?
பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, முதன்முறையாக பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட உள்ளார்.

Rashmika Mandanna First Time Dance For Item Number
ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவைத் தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை ஐட்டம் சாங்கில் அவரைக் காண முடியவில்லை. ஆனால், அவரது ரசிகர்களின் காத்திருப்புக்கு விரைவில் முடிவு வரவுள்ளது. தெலுங்கு சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தில், தனது நடனத்தால் திரையை அலங்கரிக்க உள்ளார். இப்படத்தின் பட்ஜெட் சுமார் 360 கோடி ரூபாய் என இணையத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தப் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளார் ராஷ்மிகா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் டிராகன் படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா சிறப்பு ஐட்டம் சாங்கில் ஆடுவார் எனக் கூறப்படுகிறது. 'டிராகன்' படத்தின் தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனாவை சிறப்பு நடனத்துக்கு அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. படத்தில் ஒரு துடிப்பான பாடல் தேவைப்படுவதால், முன்னணி நடிகை ஒருவரை இதற்குத் தேர்வு செய்ய விரும்பினர். அதனால்தான் ராஷ்மிகா மந்தனாவை அணுகினர்.
ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம்
ராஷ்மிகா மந்தனா இதுவரை எந்த படத்திலும் ஐட்டம் டான்ஸ் ஆடவில்லை என்பதாலும், அவரது பான் இந்தியா புகழ் காரணமாக இந்தப் பாடல் வெற்றி பெறும் என்பதாலும் பிரசாந்த் நீல் அவரை அணுகியதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தப் பாடலில் நடனமாட நடிகை ராஷ்மிகா மந்தனா அதிகம் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு தரப்பும் முடிவு செய்துள்ளதாம். இதனால் ராஷ்மிகா - ஜூனியர் என்.டி.ஆர் காம்போவில் செம குத்து டான்ஸ் தயாராவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
‘டிராகன்’ படம் எப்போ ரிலீஸ்?
'டிராகன்' திரைப்படம் 2026ம் ஆண்டு ஜூன் 25ந் தேதி அன்று வெளியாக உள்ளது. தற்போது கர்நாடகாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 25 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2' மற்றும் விக்கி கௌஷலுடன் 'சாவா' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த பிறகு, சமீபத்தில் சல்மான் கானுடன் 'சிக்கந்தர்' படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் தோல்வியடைந்தது.