- Home
- Cinema
- Rashmika Vs Deepika Padukone: பாலிவுட்டில் தீபிகா படுகோன் சாதனையை 3 படங்களில் முறியடித்த ராஷ்மிகா!
Rashmika Vs Deepika Padukone: பாலிவுட்டில் தீபிகா படுகோன் சாதனையை 3 படங்களில் முறியடித்த ராஷ்மிகா!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை, ராஷ்மிகா மந்தனா தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் முந்தி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகின் உள்ளே நுழைந்தவர் தான் தீபிகா படுகோன். பல வருட திரை வாழ்க்கையில் வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ள தீபிகா படுகோன் திருமணம், ஆகி குழந்தை பெற்றபின்னரும் முன்னணி நடிகை என்கிற தராசில் இருந்து இறக்கிவிடப்படவில்லை.
தீபிகா படுகோன் நடித்த படங்கள் பெரிய அளவில் கலெக்ஷன் செய்துள்ளது:
தற்போது வரை பாலிவுட் திரையுலகில் இவர் நம்பர் ஒன் நடிகையாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவர் தேர்வு செய்து நடித்து வரும் கதாபாத்திரங்கள் தான். அதே போல் பாக்ஸ் ஆபீஸிலும் தீபிகா படுகோன் நடித்த படங்கள் பெரிய அளவில் கலெக்ஷன் செய்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் போட்டி
பல முன்னணி நடிகைகளால கூட நிகழ்த்த முடியாத சாதனைகளை தீபிகா படுகோன் நிகழ்த்தி உள்ளார். ஆனால் இப்போது பாலிவுட் திரையுலகில் இவருக்கு போட்டி வந்துள்ளது.
பாலிவுட் ராணியை வீழ்த்திய ராஷ்மிகா
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா தான் அந்த போட்டி. பாலிவுட்ல பாக்ஸ் ஆபிஸ் ராணியாக இருந்த தீபிகாவ மூணு படங்கள் மூலமா ராஷ்மிகா பின்னுக்கு தள்ளியுள்ளார். பிரபல ட்ராக்கிங் வெப்சைட்டான கோய் மோய் ரிப்போர்ட் படி, அதிகமா 500 கோடி படங்கள் கொடுத்துள்ள ஒரே இந்திய நடிகை ராஷ்மிகா என அறிவித்துள்ளது.
தீபிகா படுகோன் படத்தின்வசூல் சாதனைகள்
இந்த பெருமை முன்பு தீபிகாவுக்கு தான் இருந்தது. அதாவது கொரோனாவுக்கு பிறகு தீபிகா நடித்த 5 படங்கள் 100 கோடி வசூல் சாதனை செய்தது. ஆனா 500 கோடி படங்கள் ரெண்டு தான். பதான்(543.22), ஜவான்(640.42) இதுதான் அந்த படங்கள். கல்கியோட ஹிந்தி வெர்ஷன் 292.96 கோடி வசூல் பண்ணுச்சுன்னு ரிப்போர்ட் சொல்லுது.
3 படத்தில் தீபிகாவை வீழ்த்திய ராஷ்மிகா
அதே நேரம் ராஷ்மிகா மந்தனா மூணு 500 கோடி படங்கள பாலிவுட்டுக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அனிமல்(554), புஷ்பா 2(1265.97) இது ரெண்டு படம். இன்னொன்னு சாவா. இந்த படம் 447.26 கோடி வசூல் பண்ணிருக்குன்னு ரிப்போர்ட் சொல்லுது. இந்த வாரம் இந்த படம் 500 கோடி கிளப்ல சேரும். சல்மான் கானின் சிகந்தர் படத்திலும் நடிகை ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.