- Home
- Gallery
- Rashmika Mandanna : இதனால தான் அவங்க நேஷனல் கிரஷ்.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்..
Rashmika Mandanna : இதனால தான் அவங்க நேஷனல் கிரஷ்.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்..
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

Rashmika Mandanna photos
நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். வெறும் 7 ஆண்டுகளிலேயே புஷ்பா, கீதா கோவிந்தம், சீதா ராமம் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்.
Rashmika Mandanna
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
Rashmika Mandanna photos
தமிழில் திணறி வந்த ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மஜ்னு, குட் பை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த வகையில் ராஷ்மிகா கடைசியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
Rashmika Mandanna
அவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள்ஃப்ரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்..ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ 2 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
Rashmika Mandanna photos
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது புதிய போட்டோக்களை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.
Rashmika Mandanna photos
புடவையில் இருக்கும் க்யூட் போட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார். அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன..