MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முகூர்த்தக்கால் நட்டாச்சு! ரம்யா பாண்டியன் வீட்டில் மற்றொரு திருமணம் - குவியும் வாழ்த்து!

முகூர்த்தக்கால் நட்டாச்சு! ரம்யா பாண்டியன் வீட்டில் மற்றொரு திருமணம் - குவியும் வாழ்த்து!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் கூட ஆகாத நிலையில், அவருடைய தம்பிக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நட்டு - நலங்கு வைக்கும் நிகழ்வின் புகைப்படத்தை ரம்யா பாண்டியன் தற்போது பகிர்ந்துள்ளார்.  

3 Min read
Author : manimegalai a
Published : Jan 29 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
பரசு பாண்டியனுக்கு திருமணம்:

பரசு பாண்டியனுக்கு திருமணம்:

நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்தை தொடர்ந்து, அவருடைய தம்பி பரசு பாண்டியனுக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இது குறித்து புகைப்படங்களை ரம்யா பாண்டியனே தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
ரம்யா பாண்டியன் தந்தை துரை பாண்டியன்:

ரம்யா பாண்டியன் தந்தை துரை பாண்டியன்:

'டம்மி டப்பாசு' என்கிற திரைப்படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ரம்யா பாண்டியன். இவருடைய சித்தப்பா அருண்பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் - தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அதைப்போல் ரம்யா பாண்டியனின் தந்தையும் திரைப்பட பின்னணியை சார்ந்தவர் தான். சில திரைப்படங்களை தயாரித்துள்ள ரம்யா பாண்டியனின் தந்தை, ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளார். இவர் இயக்கிய - தயாரித்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.  சொந்த ஊரான திருநெல்வேலிக்கே சென்று குடும்பத்தோடு செட்டிலானார்.

கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!

 

311
துரை பாண்டியன் மரணம்:

துரை பாண்டியன் மரணம்:

திருநெல்வேலியில் பல ஏக்கர் கணக்கில் இவருக்கு நிலங்கள் இருந்த நிலையில், விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். அந்த சமயத்தில் தான் விஷ வண்டு கடித்து சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டியன் இறந்தார். அவர் இறக்கும்போது, ரம்யா பாண்டியன் அவருடைய சகோதரி மற்றும் சகோதரன் என அனைவருமே சிறு பிள்ளைகள் தான்.

411
அருண்பாண்டியன்

அருண்பாண்டியன்

3 பிள்ளைகளையும் தனி ஆளாக வளர்த்து வந்த சாந்தி துரை பாண்டியன்... அவர்களின் படிப்புக்காக மீண்டும் சென்னைக்கு வரும் சூழ்நிலை உருவானது. ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண்பாண்டியன் தான், அப்பா ஸ்தானத்தில் இருந்து இவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரை பல உதவிகளை செய்து வருகிறார். இது பற்றி அண்மையில் சாந்தி துரைபாண்டியன் கூறி இருந்தார்.

ஜனவரி 31ந் தேதி தியேட்டர் & OTTயில் போட்டிபோட்டு ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

511
ஹீரோயினாக அறிமுகமான ரம்யா பாண்டியன்:

ஹீரோயினாக அறிமுகமான ரம்யா பாண்டியன்:

எனினும் ரம்யா பாண்டியன் அவரிடம் சென்று தனக்கான பட வாய்ப்புகளையோ - சிபாரிசோ கேட்டு என்றுமே நின்றது இல்லை. தனக்கான வாய்ப்பை தானே தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்த ரம்யா பாண்டியன். இவர் கதாநாயகியாக அறிமுகமான 'டம்மி டப்பாசு' திரைப்படம் தோல்வியை தழுவினாலும், இதைத் தொடர்ந்து வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.

611
சின்னத்திரையில் கவனம்:

சின்னத்திரையில் கவனம்:

ஆனால் இதைத்தொடர்ந்து தேர்வு செய்து இவர் நடித்த படங்கள், இவருக்கு கை கொடுக்காமல் போனது. தனக்கான வாய்ப்பை, வெள்ளித்திரையைத் தாண்டி சின்னத்திரையிலும் தேடத் துவங்கினார் ரம்யா பாண்டியன். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோ ஷூட் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், அதிரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்; 3 தங்க மெடல்கள் வென்று அசத்தல்

711
குக் வித் கோமாளி சீசன் 2

குக் வித் கோமாளி சீசன் 2

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் வரை வந்தாலும், இவரால் டைட்டில் வெல்ல முடியாமல் போனது.  இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் அதிரடியாக களமிறங்கினார். முதல் நாளில் இருந்தே மிகவும் தெளிவாக தன்னுடைய விளையாட்டை விளையாடின ரம்யா பாண்டியன் மீண்டும் பைனல் வரை வந்து விருதை தவறவிட்டார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடிய ரம்யா பாண்டியனுக்கு இரண்டாவது ரன்னர் அப்பாக மாறினார்.

811
லவல் தவான் மீது வந்த காதல்:

லவல் தவான் மீது வந்த காதல்:

திரைப்பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால், ஆன்மீக சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டிய ரம்யா பாண்டியனுக்கு,  அதுதான் காதல் வர காரணமாக அமைந்தது. யோகா பயிற்சி எடுக்க ரிஷிகேஷுக்கு சென்ற போது, அங்கு யோகா பயிற்சியாளராக இருந்த லவல் தவானை காதலிக்க துவங்கினார். இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் லவல் தவானை கடந்த நவம்பர் 8-ஆம் தேதி கங்கை நதிகாரியில் உள்ள கோவிலில் கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் கோவிலில் நடந்ததால் மிகவும் எளிமையாகவே நடந்தது.

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!

911
லவல் தவான் உடன் காதல் திருமணம்:

லவல் தவான் உடன் காதல் திருமணம்:

இதைத் தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட ரிசப்ஷன் ஒன்றையும் நடத்தினர். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த தம்பதிகளை வாழ்த்தினார். திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய ஹனிமூன் கொண்டாட்டத்தை தாய்லாந்து நாட்டில் கொண்டாடிய ரம்யா பாண்டியன், பொங்கல் திருவிழாவை தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார்.

1011
சென்னையில் நடந்த ரிசப்ஷன்:

சென்னையில் நடந்த ரிசப்ஷன்:

இதைத் தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட ரிசப்ஷன் ஒன்றையும் நடத்தினர். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த தம்பதிகளை வாழ்த்தினார். திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய ஹனிமூன் கொண்டாட்டத்தை தாய்லாந்து நாட்டில் கொண்டாடிய ரம்யா பாண்டியன், பொங்கல் திருவிழாவை தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார்.

யார் இந்த தங்கப்புள்ள? பிக் பாஸ் 8 மூலம் மக்கள் மனதை வென்ற இந்த நடிகை யாருன்னு தெரியுதா?

1111
ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த திருமணம்:

ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த திருமணம்:

அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் இனிமையான தருணங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், வீட்டில் நடக்கும் அடுத்த திருமணம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசுவுக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளதாம். இதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் முழு வீச்சியில் இறங்கியுள்ளனர். இன்றைய தினம் பந்தக்கால் நட்டு பரசுவுக்கு முதல் நாள் நலங்கு வைக்கப்பட்டுள்ளது.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரம்யா பாண்டியன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் பரசுவின் திருமணத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரம்யா பாண்டியனுக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்கு முன்பே பரசுவுக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved