யார் இந்த தங்கப்புள்ள? பிக் பாஸ் 8 மூலம் மக்கள் மனதை வென்ற இந்த நடிகை யாருன்னு தெரியுதா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனதை வென்ற பெண் போட்டியாளர் ஒருவரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தங்கப்புள்ள
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் 8-வது சீசனில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 8வது சீசனை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவடைந்த நிலையில், அதில் ரசிகர்கள் தங்கப்புள்ளயாக தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய போட்டியாளர் ஒருவரின் குழந்தைப்பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
பிக் பாஸ் சீசன் 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் எலிமினேஷன் நடக்கும். இதற்காக நாமினேட் ஆகும் போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான அளவு வாக்குகளை செலுத்தி இருக்கிறார்களோ அந்த போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். அப்படி பிக் பாஸ் சீசன் 8-ல் மொத்தம் இருந்த 15 வாரங்களிலும் நாமினேட் ஆன போட்டியாளர் ஒருவர் இறுதிவரை மக்களால் எலிமினேட் செய்யப்படவில்லை. அவரை அவரே எலிமினேட் செய்துகொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் அருண் என்னோட புருஷன்; சொந்தம் கொண்டாடும் பெண்! அப்போ அர்ச்சனா நிலைமை?
பிக் பாஸ் ஜாக்குலின்
அந்த போட்டியாளர் வேறுயாருமில்லை ஜாக்குலின் தான். பிக் பாஸ் வரலாற்றில் அதிகமுறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜாக்குலின், பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வராததால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பைனல் வாரத்திற்குள் நுழைந்தும் இறுதிப்போட்டிக்கான மேடையில் ஏற தகுதி உள்ள போட்டியாளராக இருந்தும் அவரின் வாய்ப்பு 2 விநாடி லேட்டாக வந்ததால் பரிபோனது.
மக்கள் அன்பை வென்ற ஜாக்குலின்
ஜாக்குலினை ரசிகர்கள் செல்லமாக தங்கப்புள்ள என்று தான் அழைத்து வருகிறார்கள். அவர் எலிமினேட் ஆன எபிசோடு தான் இந்த சீசனில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்ற எபிசோடு ஆகும். கோப்பையை நழுவவிட்டாலும் மக்களின் அன்பை சம்பாதித்திருக்கும் ஜாக்குலின், தன் தாயின் அரவணைப்பில் தான் சிறுவயதில் இருந்து வளர்ந்து வருகிறார். அவர் விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆகி, பின்னர் தேன்மொழி என்கிற சீரியலில் நாயகியாகவும் நடித்தார்.
ஜாக்குலின் குழந்தைப்பருவ புகைப்படம்
இதுதவிர சினிமாவில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்திருந்தார் ஜாக்குலின். அப்படத்திற்கு பின் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் வந்த ஜாக்குலின் இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் பெற்றுள்ளதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவரின் குழந்தைப்பருவ புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்