பிக் பாஸ் அருண் என்னோட புருஷன்; சொந்தம் கொண்டாடும் பெண்! அப்போ அர்ச்சனா நிலைமை?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அருண் பிரசாத், நடிகை அர்ச்சனாவை காதலித்து வரும் நிலையில், அவர் மனைவி என பெண் ஒருவர் புயலை கிளப்பி உள்ளார்.

அருண் பிரசாத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலமானவர் அருண் பிரசாத். அந்த சீரியலில் பாரதியாக நடித்து மக்கள் மனதை வென்ற இவர், அதன்பின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முதல் சில வாரங்கள் அமைதிப்புறாவாக வலம் வந்த அருண், போகப் போக சண்டை சேவலாக மாறினார். குறிப்பாக முத்துக்குமரனுடன் அதிகம் சண்டையிட்டு தன் பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.
பிக் பாஸ் அருண் பிரசாத்
ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்து அவரே தன்னை மாற்றிக் கொண்டு, புது மனிதனாக அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய காதலியான அர்ச்சனாவை அறிமுகம் செய்துவைத்தார் அருண் பிரசாத், அர்ச்சனாவும், அருணும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் விரைவில் திருமணமும் செய்துகொள்ள உள்ளனர். தற்போது அவர்களது திருமணத்திற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
யார் இந்த சுபத்ரா?
இந்த நிலையில், அருண் பிரசாத் தன்னுடைய கணவர் என பெண் ஒருவர் இன்ஸ்டாவில் சொந்தம் கொண்டாடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாவில் சுபத்ரா அருண் என்கிற ஐடியில் இருந்து பெண் ஒருவர் அருண் பிரசாத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதோடு இல்லாமல் அந்த ஐடியின் பயோவில், என் அர்ஜுன் என குறிப்பிட்டு அருணின் ஐடியை டேக் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தாங்கள் 5 வருடமாக காதலித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உடன் கல்யாணம் எப்போ? அருண் சொன்ன குட் நியூஸ்
அருண் பிரசாத்தின் மனைவியா?
பின்னர் பாரதியின் கண்ணம்மா என்றும், பெஸ்ட் ஹீரோ 2021 என குறிப்பிட்டு, என்னுடைய கணவர்.. சிங்கக்குட்டி, பாண்டா குட்டி என செல்லப்பெயர்கள் எல்லாம் வைத்திருக்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் அருணின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அத்தை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் இதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை அருணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
அப்போ அர்ச்சனா நிலைமை?
இதுமட்டுமின்றி பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு ஜோடியாக நடித்த ரோஷினி, சுபத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இப்படி சுபத்ராவின் இந்த பதிவுகளால், அவர் அருணின் ரசிகையா அல்லது மனைவியா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். விரைவில் அர்ச்சனா உடன் அருணுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இதுபோல ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளதால் அதற்கு அருண் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அருண் பிரசாத்துக்கு பிக் பாஸ் அள்ளி கொடுத்த சம்பளம்; ஆத்தாடி இத்தன லட்சமா?