அருண் பிரசாத்துக்கு பிக் பாஸ் அள்ளி கொடுத்த சம்பளம்; ஆத்தாடி இத்தன லட்சமா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு 98வது நாளில் எலிமினேட் ஆன அருண் பிரசாத் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
Arun Prasath
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள், 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 24 பேர் கலந்துகொண்டனர். இதில் தற்போது இறுதி வாரத்திற்குள் 6 பேர் மட்டுமே சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி முதல் எலிமினேட் ஆன 8 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்து தங்கள் பங்கிற்கு விளையாடி வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுக்க விறுவிறுப்பாக சென்றது.
Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் தீபக், ரயான், முத்துக்குமரன், விஷால், அருண் பிரசாத், செளந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா ஆகிய 8 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களில் ரயான் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதால் அவரைத் தவிர எஞ்சியுள்ள 7 பேரும் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகி இருந்தனர். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வார வாரம் எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... எதிர்பாராத எலிமினேஷன்; டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்!
Arun, Archana
அதில் குறைவான வாக்குகளை பெற்ற அருண் பிரசாத் மற்றும் தீபக் எலிமினேட் ஆகி உள்ளனர். இவர்கள் இருவருமே பைனல் வரை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென எலிமினேட் ஆகி உள்ளது சக போட்டியாளர்களுக்கே மிகவும் பேரதிர்ச்சியாக இருந்தது. இதில் நேற்றைய எபிசோடில் அருண் வெளியேற்றப்பட்டார். அவர் எலிமினேட் ஆனபோது அவரின் நண்பரான விஷால் மற்றும் ரயான் கதறி அழுதனர். ஆனால் அருண் சந்தோஷமாக வெளியே செல்வதாக கூறிச் சென்றார்.
Arun, VIshal
இந்த சீசனில் அதிகம் சண்டை போட்ட போட்டியாளர் என்றால் அது அருண் பிரசாத் தான். அவர் முதலில் சில வாரங்கள் எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் சைலண்டாக இருந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்ததும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். குறிப்பாக மஞ்சரி, முத்துக்குமரன், தீபக் ஆகியோருடன் சண்டையிட்ட அருண், ஒரு கட்டத்தில் அவர் மீது இருக்கும் தவறை திருத்திக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது தான் ஒரு புது மனிதனாக செல்வதாக பெருமிதம் கொண்டார்.
Arun Prasath Salary
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலில் நடித்து பேமஸ் ஆனதால், அருணுக்கு பிக் பாஸ் சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இதன்மூலம் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த 98 நாட்களுக்கு அவருக்கு மொத்தமாக ரூ.19 லட்சத்துக்கு 60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம்.
இதையும் படியுங்கள்... என் EX காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்; விஷால் காதில் சொன்னது இது தான்! அன்ஷிதா ஓபன் டாக்!