MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என் EX காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்; விஷால் காதில் சொன்னது இது தான்! அன்ஷிதா ஓபன் டாக்!

என் EX காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்; விஷால் காதில் சொன்னது இது தான்! அன்ஷிதா ஓபன் டாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறிய நடிகை அன்ஷிதா வெளியே வந்ததும், தன்னுடைய முன்னாள் காதலரை பிரேக்-அப் செய்து விட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Jan 10 2025, 04:03 PM IST| Updated : Jan 10 2025, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
8 wild card entry in Bigg Boss tamil 8

8 wild card entry in Bigg Boss tamil 8

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்? என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில்... பிக் பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு, டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியேறிய 8 போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ் .

26
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நாக் அவுட் சுற்று மூலம், இந்த 8 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ள நிலையில்... இவர்களில் இருவர் ஃபைனலிஸ்டாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் சுமார் 95 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடி வரும் போட்டியாளர்களில் ரயானை தவிர இருவர் வெளியேறவும் வாய்ப்புள்ளது. எனவே மீதமுள்ள 7 போட்டியாளர்களும் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முனைப்பு காட்டி விளையாடி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காமெடி நடிகர் மீது துணை நடிகை போலீசில் புகார்!
 

36
Chellama Serial actress Anshitha

Chellama Serial actress Anshitha

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு 84 வது நாளில் வெளியேறிய அன்ஷிதா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியல் மூலம் பிரபலமானவர்தான் அன்ஷிதா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக அர்னவ் நடித்தார். அர்னவ் மனைவியும், சீரியல் நடிகையுமான திவ்யா ஸ்ரீதர்... தன்னுடைய கணவர் மற்றும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவுக்கு இடையே தவறான உறவு உள்ளது என கடந்த 2023 ஆம் ஆண்டு போலீசில் புகார் கொடுத்தார்.
 

46
Arnav and Dhivya Sridhar

Arnav and Dhivya Sridhar

சின்னத்திரை பிரபலங்கள் பலர் திவ்யா ஸ்ரீதருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்த நிலையில்... அன்ஷிதா திவ்யாவை திட்டுவது போல் வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கூட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி முன் மறைமுகமாக தெரிவித்திருந்தார் அன்ஷிதா.  இந்த சர்ச்சை ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தான், அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் இணைந்து பிக் பாஸ் வீட்டுக்குள் ஜோடியாக சென்றனர். இவர்கள் இருவரும் உள்ளே வந்து காதல் கன்டென்ட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் ரொம்ப நல்லவன் என்பதை காட்டிக் கொள்ளும் விதமாக அர்னவ் விளையாடுகிறார் என பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வந்த நிலையில், அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

விஷாலின் தற்போதைய நிலை; இது தான் காரணமா? ஜெயம் ரவி கூறிய கருத்தால் பரபரப்பு!

56
Arnav Re Entry in Bigg Boss

Arnav Re Entry in Bigg Boss

தற்போது வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்துள்ள அர்னவ் தன்னை நிரூபித்து ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக இடம்பிடிக்க போராடி வருகிறார்.  அதே நேரம் உள்ளே வந்த கையேடு, ஜெப்ரி மற்றும் சத்யா பற்றி இவர் பேசிய கருத்து முகம் சுழிக்க வைத்தது. விஷாலை பார்த்து காதல் கன்டென்ட் கொடுத்து விளையாடி வருகிறீர்கள், உங்களின் காதலி யார்? தர்ஷிகாவா -அன்ஷிதாவா என கேட்டதை விஷாலை சங்கப்படுத்தியது. 
 

66
Anshitha About EX Lover

Anshitha About EX Lover

அன்ஷிதா விஷாலுடன் பழகியது நட்பாக தெரிந்தாலும், வெளியேறும் முன் விஷாலின் காதலில் ஏதோ சொல்லினர். தன்னுடைய காதலை தான் அவர் கூறினார் என சிலர் தெரிவித்தனர். இதுகுறித்த ஒரு விவாதம் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் இந்த சந்தேகத்திற்கு பதிலையும் அவரே கூறியுள்ளார். இதுகுறித்து அன்ஷிதா பேசுகையில், "கடந்த மூன்று வருடமாக, நானும் அர்னவும் ஒரே சீரியலில் இணைந்து நடித்தோம். இருவருக்குள்ளும் நல்ல நட்பு உள்ளது. ஆனால் நாங்கள் காதலிக்கவில்லை. நான் என்னுடைய முன்னாள் காதலனால் பல கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன். வெளியே போனதும் முதலில் அவரை பிரேக்கப் செய்வேன் என்று கூறி இருந்தேன். இப்போது மிகவும் போல்டாக அவரை பிரேக் அப் செய்து விட்டேன். விஷால் காதில், என்னுடைய முன்னாள் காதலனின் பெயரை தான் கூறினேன் என தெரிவித்துள்ளார். அந்த முன்னாள் காதலன் யார் என்பதை அன்ஷிதா ரசிகர்களுக்கும் ரிவீல் செய்வாரா? வெயிட் பண்ணி பார்ப்போம் .

யார் இந்த ஸ்ருத்திகா அர்ஜுன்? நடிச்ச படமெல்லாம் பிளாப்; பிறகு எப்படி கோடீஸ்வரி ஆனார்?
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved