MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யார் இந்த ஸ்ருத்திகா அர்ஜுன்? நடிச்ச படமெல்லாம் பிளாப்; பிறகு எப்படி கோடீஸ்வரி ஆனார்?

யார் இந்த ஸ்ருத்திகா அர்ஜுன்? நடிச்ச படமெல்லாம் பிளாப்; பிறகு எப்படி கோடீஸ்வரி ஆனார்?

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஸ்ருத்திகா பற்றியும் அவரின் சொத்து மதிப்பு பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 10 2025, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shrutika

Shrutika

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்காததால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருத்திகா, அங்கு சென்று முதல் எபிசோடிலேயே அனைவரையும் இம்பிரஸ் செய்துவிட்டார். குறிப்பாக சல்மான் கானே இந்தி பிக் பாஸில் வியந்து பார்த்த ஒரு போட்டியாளர் என்றால் அது ஸ்ருத்திகா தான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் தமிழ் பெண்ணும் ஸ்ருத்திகா தான். இவர் அந்நிகழ்ச்சியில் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற மிட் வீக் எவிக்‌ஷனில் எலிமினேட் ஆனார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Shrutika Arjun

Shrutika Arjun

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சல்மான் கானே வியந்து பாராட்டும் அளவுக்கு உயர்ந்த ஸ்ருத்திகா யார் என்பதை தற்போது பார்க்கலாம். இவர் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் ஸ்கூல் படிக்கும்போதே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் ஸ்ரீ. இப்படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் நடிக்கும்போது நடிகை ஸ்ருத்திகாவுக்கு வெறும் 15 வயது தானாம்.

35
Bigg Boss Shrutika

Bigg Boss Shrutika

ஸ்ரீ படத்தை தொடர்ந்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, மலையாளத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்தார். இந்த படங்கள் அனைத்துமே அட்டர் பிளாப் ஆகின. இதனால் சினிமாவை விட்டே விலகிய ஸ்ருத்திகா, தொழிலதிபரான அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார். 2003ம் ஆண்டுக்கு பின் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஸ்ருத்திகா, கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு ஸ்ருத்திகா வெளியிட்ட வீடியோ! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

45
Shrutika Salary

Shrutika Salary

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி கலக்கிய ஸ்ருத்திகா, அதில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தில் டைட்டிலையும் ஜெயித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜெயித்ததற்காக ஸ்ருத்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் அந்த பணத்தை குழந்தைகளின் கல்விக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டும் கிடைத்தது.

55
Shrutika Net Worth

Shrutika Net Worth

இதையடுத்து தான் தற்போது இந்தி பிக் பாஸில் கலந்துகொண்டதன் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் ஸ்ருத்திகா. இவருக்கு இந்தி பிக் பாஸில் கலந்துகொண்டதற்காக ஒரு வாரத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாம். நடிகை ஸ்ருத்திகா நடிப்பை தாண்டி ஒரு தொழிலதிபராகவும் ஜொலித்து வருகிறார். இவர் சொந்தமாக அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதோடு, தனக்கென ஒரு தனி துணி பிராண்டையும் வைத்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. நடிகை ஸ்ருத்திகாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்...டைட்டில் கனவோடு இருந்தவரை மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றிய பிக் பாஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved