திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காமெடி நடிகர் மீது துணை நடிகை போலீசில் புகார்!
திருமணம் செய்து கொள்வதாக கூறி காமெடி நடிகர் காதல் சுகுமார் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக துணை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
kadhal sukumar
நடிகரும் - இயக்குனருமான சுகுமார், அடிக்கடி ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டி மூலம் சில பரபரப்பான கருத்துக்களை பதற வைத்தவர். வைகை புயல் வடிவேலு, "தன்னைப் போலவே இவர் நடிப்பதாக கூறி, இவரை ஆள் வைத்து மிரட்டியதாக கடந்த 2023-ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதேபோல கடந்த ஆண்டு கூட, திரை உலகில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதை யாரும் வெளியே பேசுவதில்லை. குறிப்பாக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து இவர் பேசிய கருத்து, பேசு பொருளாக மாறியது.
kadhal sukumar
சுகுமார் 1997 ஆம் ஆண்டு 'சக்தி' என்கிற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' திரைப்படம் தான் இவருக்கு தமிழ் திரை உலக ரசிகர்கள் மத்தியில் கவனிக்க வைத்தது. இதன் பின்னரே ரசிகர்கள் பலரும் காதல் சுகுமார் என இவரை அழைக்க தொடங்கினர்.
விஷாலின் தற்போதைய நிலை; இது தான் காரணமா? ஜெயம் ரவி கூறிய கருத்தால் பரபரப்பு!
kadhal sukumar
இதுவரை தமிழ் சினிமாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி வேடத்திலும்... குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் சுகுமார் இரண்டு திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய 'திருட்டு விசிடி' படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். 2015-ஆம் ஆண்டு சுமால் பட்ஜெட் படமாக இப்படம் வெளியாகி கவனிக்கப்படாமல் போனது. இதை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு சும்மாவே ஆடுவோம் என்கிற திரைப்படத்தையும் இயக்கி தோல்வி கண்டார்.
இந்நிலையில், காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கொடுத்துள்ள புகாரில், " ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து தன்னிடம் , காதல் சுகுமார் நெருங்கி பழகிய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த மூன்று வருடங்களாக தன்னுடைய நகை, பணம் போன்றவற்றை ஏமாற்றி வாங்கி கொண்டார். இப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்க்கிறார் என கூறியுள்ளார். துணை நடிகை கொடுத்த புகாரின் பேரில் காதல் சுகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோலிவுட் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளே 200 கோடி வசூல் கன்ஃபார்ம்; ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?