MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 28 2025, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமரன் பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி:

அமரன் பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி:

தொடர்ந்து வித்யாசமான கதைகளத்திலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கதாபாத்திரங்களிலும், நடித்து வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் சிவகார்த்திகேயனை ரூ.300 கோடி வசூல் நாயகனாக மாற்றியது. மேலும் இந்த படத்தை தயாரித்த உலகநாயகன் கமலஹாசனுக்கும், மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது.

அதேபோல் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த படத்தின் மூலம் தன்னுடைய தனித்துவமான படைப்பை இயக்கி இருந்தார். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ.150 முதல் ரூ.160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.340 கோடி வரை லாபம் ஈட்டியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்

சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியான நடிப்பை, நடிகை சாய் பல்லவியும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து இவரை வைத்து இயக்க பல முன்னணி இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், இதைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்று, சுதா கங்கோரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

சுந்தர் சி பார்ட்டியில் இது தான் நடந்தது; விஷால் குடித்தாரா? உண்மையை உடைத்த பிரபலம்!

34
வில்லனாக நடிக்கும் ரவி மோகன்

வில்லனாக நடிக்கும் ரவி மோகன்

இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மூலம் இதுவரை ரொமாண்டிக் மற்றும் அதிரடி ஆக்சன் ஹீரோவாக இருந்த நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இவரை தவிர முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார்.

44
பராசக்தி டீசர் நாளை மாலை 4 மணிக்கு:

பராசக்தி டீசர் நாளை மாலை 4 மணிக்கு:

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு 'பராசக்தி' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், சில சிவாஜி ரசிகர்கள் இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர். தற்போது இந்த படம் குறித்த மற்றொரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் "தீ பரவட்டும் நாளை மாலை 4 மணி முதல்" என வாசகம் இடம்பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு போராளி போல் கையில் பாட்டில் நின்று கொண்டிருக்க அவரை வைத்திருக்கும் பாட்டிலில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.  இந்த போஸ்டரே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

தேடி வந்த ரஜினிகாந்த் பட வாய்ப்பு; இயக்க மறுத்த முன்னணி ஹீரோ - யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved