சுந்தர் சி பார்ட்டியில் இது தான் நடந்தது; விஷால் குடித்தாரா? உண்மையை உடைத்த பிரபலம்!
சுந்தர் சியின் பிறந்தநாள் பார்ட்டியில் விஷால் குடித்திருந்ததாக வெளியான செய்தி குறித்து, திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
சுந்தர் சி வைத்து பார்ட்டி
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான 'மதகஜராஜா' திரைப்படம் எடுக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியையும் சுந்தர் சியின் பிறந்தநாளையும் பார்ட்டி வைத்து கொண்டாடினார் குஷ்பூ. இந்த பார்ட்டியில் மீனா, கே எஸ் ரவிக்குமார், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, என்று பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பார்ட்டியில் எடுக்கப்பட்ட போட்டோஸ்:
இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீனா தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில், விஷால், மீனாவின் தோள்பட்டையில் கை போட்ட இருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
தேடி வந்த ரஜினிகாந்த் பட வாய்ப்பு; இயக்க மறுத்த முன்னணி ஹீரோ - யார் தெரியுமா?
பயில்வான் ரங்கநாதன் கருத்து:
மேலும் இந்த பார்ட்டியில் விஷால் குடித்து போதையில் இருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் இது குறித்து சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் பார்ட்டி என்பது இயல்பான ஒன்று:
அதில் அவர் கூறியிருப்பதாவது... பொதுவாக சினிமா துறையில் பார்ட்டி என்பது இயல்பான ஒன்று தான். திருமணம், சக்ஸ்ஸ் மீட், பிறந்தநாள், பட ஷூட்டிங் நிறைவு என்று எல்லாவற்றிலும் பார்ட்டி இருக்கும். அந்த பார்ட்டியில் நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள்.
மதகஜராஜா:
இது ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். இதன் மூலமாக ஒருவருக்கொருவர் நண்பர்களாக பழகி அதன் பிறகு லவ்வர்ஸ் ஆக மாறுகிறார்கள். அப்படி தான் மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி நடை போட்டது.
மீனா தோல் மீது கை போட்ட விஷால்:
இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் சுந்தர்சியின் பிறந்த நாளை முன்னிட்டும் பார்ட்டி வைக்கப்பட்டது. அந்த பார்ட்டியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் தான் விஷால் மீனா தோள் மீது கை போட்டார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியிருந்தது.
குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இது அன்பின் அடையாளம் தான்:
உண்மையில் இது காலம் காலமாக சினிமாவில் இருக்கும் ஒரு பழக்கம் தான். திருமணம், ரிஷப்ஷன், பிறந்தநாள் என்று எந்த பார்ட்டியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிப்பது வழக்கமான ஒன்று. இதில் எந்த தவறுமில்லை. இது அன்பின் அடையாளம் தான்.
விஷால் போதையில் இருந்தாரா?
பார்ட்டியில் விஷால் போதையில் இருந்ததாக செய்தி வெளியானது. ஆனால், இப்போது தான் விஷால் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சலிலிருந்து குணமடைந்து வருகிறார். அப்படியிருக்கும் போது எப்படி குடித்திருப்பார். விஷால் தனது புதிய படத்தின் கதை விவாதத்தில் இருக்கிறார் என்று அவரை பற்றிய உண்மைகளை உடைத்து பேசியுள்ளார்.