MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினிக்கு பயம்காட்டிய ஆகஸ்ட் செண்டிமெண்ட்... அதிரடியாக ஜெயிலர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா..!

ரஜினிக்கு பயம்காட்டிய ஆகஸ்ட் செண்டிமெண்ட்... அதிரடியாக ஜெயிலர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா..!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 21 2023, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் அண்ணாத்த. இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள ரஜினி, நெல்சன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர்கள் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா அளவில் புகழ்பெற்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜிகுஜிகுவென மின்னும் சேலையில்... மிதமான கவர்ச்சி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரகுல் ப்ரீத் சிங் - வைரல் கிளிக்ஸ்

34

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் முழுவதுமாக படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டது. இதர நடிகர்களின் காட்சிகள் தான் எஞ்சியுள்ளது. அதுவும் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. இதையடுத்து பின்னணி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருந்தது. அதன்படி இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

44

இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பருக்கு தள்ளிவைத்து உள்ளனர். செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி பண்டிகையை ஒட்டி ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். முன்னதாக ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன படம் பாபா. அப்படம் படுதோல்வி அடைந்ததால், ஆகஸ்ட் மாத ரஜினிக்கு செட் ஆகாது என முடிவெடுத்து செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... 40 வயசுல யூத் ஐகான் விருது... சத்தியமா இத நான் எதிர்பார்க்கவே இல்லை - தனுஷ் ஓபன் டாக்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image2
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved