ஜிகுஜிகுவென மின்னும் சேலையில்... மிதமான கவர்ச்சி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரகுல் ப்ரீத் சிங் - வைரல் கிளிக்ஸ்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் சேலையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.
கவுதம் கார்த்திக்கின் என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து கார்த்திக்கு ஜோடியாக தீரன், தேவ் மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழை விட டோலிவுட்டில் தான் அதிகளவில் பட வாய்ப்புகள் குவிந்தன.
இதனால் தெலுங்கில் அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கிய ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் கைவசம் ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் என இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்.... 40 வயசுல யூத் ஐகான் விருது... சத்தியமா இத நான் எதிர்பார்க்கவே இல்லை - தனுஷ் ஓபன் டாக்
இதில் அயலான் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படத்தின் சிஜி பணிகள் முடிவடைந்த உடன் இந்த ஆண்டு தீபாவளிக்கு அப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதுதவிர இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சேலையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
ஜிகுஜிகுவென மின்னும் லேவண்டர் நிற சேலையில் டாப் ஆங்கிள் கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. மாடர்ன் டிரெஸ்ஸை விட சேலையில் செம்ம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... மலையாள நடிகர் மம்முட்டியின் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்