40 வயசுல யூத் ஐகான் விருது... சத்தியமா இத நான் எதிர்பார்க்கவே இல்லை - தனுஷ் ஓபன் டாக்
தக்ஷின் மாநாட்டில் நடிகர் தனுஷுக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. கேப்டன் மில்லர் லுக்கில் வந்து அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன வாத்தி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷுக்கு வில்லனாக கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற தக்ஷின் மாநாட்டில் கலந்துகொண்டார் தனுஷ். அப்போது அவருக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தான் இவ்விருதை தனுஷுக்கு வழ்ங்கினார்.
இதையும் படியுங்கள்... மலையாள நடிகர் மம்முட்டியின் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்
விருது வாங்கிய பின் பேசிய நடிகர் தனுஷ், 40 வயசுல யூத் ஐகான் விருது வாங்குவேன்னு சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் நிறைய சாதிக்க இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் இதுபோன்ற கெட்டப்பில் வந்தபோது ஏற்க மறுத்தனர். ஆனால் தற்போது கொண்டாடுகிறார்கள். எனது பெற்றோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என நெகிழ்ச்சி உடன் பேசி இருந்தார் தனுஷ்.
நடிகர் தனுஷ் இந்த தக்ஷன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை அதன் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கேன்சல் செய்தாராம். அவருக்கும் அந்த விழாவில் நன்றி தெரிவித்துக் கொண்டார் தனுஷ். வேஷ்டி சட்டை அணிந்து வந்து யூத் ஐகான் விருது வாங்கிய தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... லியோ ஆடியோ லாஞ்சை மாநாடு போல் நடத்த பிளான் போட்ட விஜய்.... அரசியல் எண்ட்ரியை அறிவிக்க திட்டமா?