லியோ ஆடியோ லாஞ்சை மாநாடு போல் நடத்த பிளான் போட்ட விஜய்.... அரசியல் எண்ட்ரியை அறிவிக்க திட்டமா?
நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டாம் என படக்குழுவினரிடம் அறிவுறுத்தி உள்ளாராம்.
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பாபு ஆண்டனி, சாண்டி, பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். லியோ படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக லியோ இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த 2 தினங்களாக தக்ஷின் மாநாடு நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், மஞ்சு வாரியர், மணிரத்னம், கார்த்தி, தனுஷ் உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். நேற்று லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்தும் கலந்துகொண்டார். அப்போது தான் லியோ ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட்டை அவர் வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்... மு.க.ஸ்டாலின் முதல் விஜய் வரை.. இரவோடு இரவாக முக்கிய பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கிய டுவிட்டர் - என்ன காரணம்?
அதன்படி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டாம் என விஜய் தெரிவித்ததாகவும், அதற்கு பதிலாக திருச்சி, மதுரை அல்லது கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் பிரம்மாண்ட மேடை அமைத்து அனைத்து ஊரில் இருந்தும் ரசிகர்களை வரவழைத்து நடத்தலாம் என விஜய் ஐடியா கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக நடிகர் விஜய், படிப்படியாக சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் இந்த வேளையில், லியோ ஆடியோ லாஞ்சை மாநாடு போல நடத்த பிளான் போட்டு உள்ளதால், ஒருவேளை அந்த நிகழ்வில் தனது அரசியல் எண்ட்ரியை அறிவிக்கப்போகிறாரோ என கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்னதாக இருமுறை விஜய் படத்தின் ஆடியோ லாஞ்ச் பொதுவெளியில் நடந்துள்ளது. அதன்படி வேலாயுதம் படத்தின் ஆடியோ லாஞ்ச் மதுரையிலும், நண்பன் படத்தின் ஆடியோ லாஞ்ச் கோவையிலும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சமந்தாவின் தோல்வியை மறக்கடித்த 'சிட்டாடல்' குழுவினருடன் செம்ம பார்ட்டி மூடில் வெளியிட்ட வைரல் போட்டோஸ்!