சமந்தாவின் தோல்வியை மறக்கடித்த 'சிட்டாடல்' குழுவினருடன் செம்ம பார்ட்டி மூடில் வெளியிட்ட வைரல் போட்டோஸ்!
நடிகை சமந்தா சிட்டாடல் வெப் தொடரின் தென்னிந்திய மொழிகளில் நடிக்க உள்ள நிலையில், இதன் ப்ரொமோஷன் பணிகளில் இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், மற்றும் குழுவினருடன் பார்ட்டி செய்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை சமந்தா, தன்னுடைய சினிமா கேரியரில் என்றும் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என நினைத்த 'சகுந்தலம்' படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்வி சமந்தாவை மிகவும் பாதித்ததாக சில தகவல்களும் வெளியாகின.
சகுந்தலம் படத்திற்கு செலவு செய்த, பட்ஜட்டில் பாதி கூட இன்னும், வசூல் ஆகவில்லை என்பதாலும் படத்திற்கு கூட்டம் வராத காரணத்தாலும், இப்படத்தை அடுத்தடுத்து திரையரங்கில் இருந்து தூக்கி வருகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே சிலர் சமந்தாவின் கேரியரே அழிந்து விட்டது என்பது போன்ற விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
சமந்தா மிகவும் எதிர்பார்த்த சகுந்தலம் படத்தின் தோல்வி, வருத்தம் கொடுத்தாலும், இதன் காரணமாக முடங்கி விடாமல்... அடுத்தடுத்து தன்னுடைய கேரியர் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவரின் செயல்பாடுகள் மூலம் நன்றாகவே தெரிகிறது.
அதாவது பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் தொடர் 'சிட்டாடெல்'. இந்த வெப் தொடர் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரீமியர் நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ள சமந்தா, சிட்டாடல் குழுவினருடன் என்ஜாய் செய்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்த வெப் தொடர், இந்திய மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. அதில் பிரியங்கா சோப்ரா கேரக்டரில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களை தொடர்ந்து சமீப காலமாக சமந்தா, வெப் தொடர்களில் நடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே நடித்த 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து மீண்டும் சிட்டாடல் தொடரில் நடிக்க உள்ள சமந்தா... மாஸான ஃபைட் சீன்களில் மட்டும் அல்ல மஜாவான... இன்டிமெசி சீன்களில் கூட நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் தொடரின் ரிமேக் ஆச்சே... இன்னும் என்னென்ன இருக்க போகுதோ பொறுத்திருந்து பார்ப்போம்.