அஜித்தியே மிஞ்சிட்டாரே! சபரிமலையில் யோகிபாபுவை பார்த்து உற்சாகமாக கைகொடுத்த ரசிகர்கள்! வைரல் வீடியோ..
நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வரும் 'சன்னிதானம் PO' படத்தின் படப்பிடிப்பு சபரிமலையில் நடந்து வரும் நிலையில், மாலை போட்டுகொண்டு ஐயப்பன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர், யோகிபாபுவை பார்த்து உற்சாகமாக கை கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், காமெடி நடிகர் என்பதை தாண்டி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வகையில், தற்போது விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜீவ் வைத்யா என்பவை இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த 20 நாட்களாக சபரிமையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் யோகி பாபு சனிக்கிழமை முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதுவரை எடுக்கப்படாத புதிய கண்ணோட்டத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. 'சன்னிதானம் PO' படம் சபரிமலை சன்னிதானத்தில், பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் யோகிபாபுவை தவிர, பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். அதே போல் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் ;நடிக்கிறார்கள்.
இரண்டாம் திருமணம் செய்த ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..! அது இந்த படத்தின் இரண்டாம் பாகமா?
சன்னிதானத்திற்கு ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் படப்பிடிப்பு நடந்து வருவதால், ஐயப்ப பக்தர்கள் பலர், யோகி பாபுவை பார்த்து கைகொடுக்க, அவரும் நலம் விசாரித்து கைகொடுத்தார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. யோகிபாபு கைகொடுத்தது மட்டும் இன்றி ரசிகர்களிடம் நலம் விசாரிப்பது போல் பேசுவதால்... அஜித்தையே மிஞ்சிவிட்டார் என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.