அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறும் இளைஞர்கள்! ரஜினி வேதனை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செல்போன் யுகத்தில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறி வருவதாக தன்னுடைய வேதனையை பகிர்ந்துள்ளார்.

74 வயதிலும், உலக அளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் ரஜினிகாந்த். தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வேட்டையன் படம் வெளியான நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கூலி ரிலீஸ்:
இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹீர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பான் இந்தியா இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
எஸ் பி வேலுமணி வீட்டை திடீரென தேடிச்சென்ற ரஜினி.! காரணம் என்ன.?
செல்போன் கலாச்சாரம்:
கூடிய விரைவில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் செல்போன் கலாச்சாரத்தால்... இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பலர் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறி வருவதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் பேசும் இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிரியாது.
‘பாரத சேவா’ தொடக்க விழா:
ரஜினிகாந்தின் மனைவி, லதா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய ‘பாரத சேவா’ தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் தான் நடிகர் ரஜினிகாந்த் இந்த கருத்தை கூறியுள்ளார். இதில் அவர் பேசியுள்ளதாவது, “இந்த செல்ஃபோன் யுகத்தில் இளைஞர்கள், ஏன் சில பெரியவர்கள் கூட, நம் பாரத நாட்டின் மகத்தான சில சம்பிரதாயம், கலாசாரம், அருமை, பெருமைகள் தெரியாமல் உள்ளனர்.
லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும்:
அதற்கான அறிவு இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கத்தியவர்கள் அவர்களின் கலாசாரம், சம்பிரதாயத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி, இந்தியாவின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள். ஆகவே, நம்முடைய பாரத நாட்டின் மகத்தான கலாசாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையை கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும். இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என் கூறியுள்ளார்.