எஸ் பி வேலுமணி வீட்டை திடீரென தேடிச்சென்ற ரஜினி.! காரணம் என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் முக்கிய பங்கு வகித்த எஸ்.பி. வேலுமணியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் தொடர்பானதா அல்லது மரியாதை நிமித்தமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Rajinikanth meets ADMK leader S P Velumani : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அந்த தேர்தலை இரண்டு கட்சிகளும் தனித்து சந்தித்தது.
இதனால் பலம் வாய்ந்த கூட்டணியோடு இருந்த திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை பெற்றது. இருந்த போதும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
Admk Bjp alliance
அதிமுக- பாஜக கூட்டணி
தற்போது இரட்டை குழல் துப்பாக்கி போல திமுகவை அதிமுகவும், பாஜகவும் எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி, கொங்கு மண்டலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணி, பாஜக தலைமையோடு பேசி கூட்டணியை மீண்டும் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் வரும் நாட்களில் திமுகவை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
ஸ்காட்லாந்து இணையான தமிழக போலீஸ் நிலை இப்படி ஆயிடுச்சே.! திமுக அரசை இறங்கி அடித்த எடப்பாடி
SP VELUMANI MEET RAJINI
எஸ்பி வேலுமணியை சந்தித்த ரஜினி
இந்த சூழ்நிலையில், அரசியல் களத்தில் இருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், திடீரென எஸ்.பி. வேலுமணியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், எஸ்.பி.வேலுமணி- ரஜினி சந்திப்பில் அரசியல் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த சந்திப்பு மரியாதை ரீதியான சந்திப்பு எனவும், அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் - தீக்ஷனா மணமக்களுக்கு கோவை தனியார் மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
பாஜகவும், திமுகவும் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான் - வேலுமணி
Tamil Nadu elections
எஸ்பி வேலுமணி மகனுக்கு வாழ்த்து
இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில், இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. வீடு தேடி வாழ்த்து தெரிவிக்க வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மகன் விஜய் விகாஸ் மருமகள் தீக்ஷனா ஆகியோர் மலர் கொத்து கொடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்ற புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.