God Bless U மாமே! அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Rajinikanth praises 'Good Bad Ugly'; What did he say about 'Jailer 2'? : அஜித் குமார் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித்தின் ரசிகர்கள் இதனை பிரமாண்டமாகக் கொண்டாடினர். முதல் நாள் முதல் காட்சிக்காக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேளங்கள் அடித்து, நடனமாடி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அஜித் படங்கள் அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றது.
Good Bad Ugly
குட் பேட் அக்லி கொண்டாட்டம்
அவரது படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளின் முன்பு கூடி தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். ‘குட் பேட் அக்லி' படமும் இதற்கு விதிவிலக்கல்ல. திரையரங்கிற்குள் நுழையும் ரசிகர்கள், அஜித்தின் பெரிய கட்-அவுட்களை ஏந்தி ஆரவாரம் செய்தனர். மேலும், படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் நடனமாடி மகிழ்ந்தனர். திரையரங்கின் நுழைவாயிலில் அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டது. ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்-அவுட்டிற்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்தும் அதகளப்படுத்தினர்.
இதையும் படியுங்கள்... Good Bad Ugly Review : எப்படி இருக்கு குட் பேட் அக்லி? Good-ஆ? Bad-ஆ? விமர்சனம் இதோ
Ajith's Good Bad Ugly
அஜித் ரசிகர்களுக்கு மாஸ் விருந்து
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் பிரியா பிரகாஷ் வாரியர், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோரு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரசிகர்களுக்கு ஒரு மாஸ் விருந்தாக படைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். தியேட்டரில் விசிலடித்து ஆரவாரத்துடன் ரசிகர்கள் படத்தை பார்த்து வருகின்றனர்.
Rajinikanth wishes Good Bad Ugly
குட் பேட் அக்லி படம் வெற்றிபெற வாழ்த்திய ரஜினி
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கூறினார். ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படம் ஷூட்டிங் நடந்து வருவதாகவும், அது எப்போது நிறைவடையும் என்பது தன்னால் கூற முடியாது எனவும் ரஜினி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லியில் தளபதி ரெபரன்ஸ்! விஜய்யின் மாஸ் டயலாக்கை பேசி அதிரவிட்ட அஜித்