இயக்குனர் மணிரத்னம் பெயரை டேமேஜ் செய்த 5 திரைப்படங்கள்..! ஐஸ்வர்யா ராய் நடித்தும் அட்ட ஃபிளாப்!
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான... மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் அட்ட ஃபிளாப் ஆன 5 படங்கள் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இயக்குனர் மணிரத்னம், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் இயக்குனர்களையும் கவனிக்க வைத்தார். இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில், திரைப்படங்களை இயக்கும் மணிரத்னம் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் ஒருவர் என்று கூட கூறலாம்.
எப்படிப்பட்ட வெற்றிப்பட இயக்குனராக இருந்தாலும்... அவர்களுக்கும் சில தோல்வி படங்கள் அமைந்து விடுகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்னத்தின் 5 தோல்விப்படங்கள் பற்றி பார்ப்போம்...
யுவா:
கடந்த 2004 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய திரைப்படம் யுவா. இந்த படத்திற்கு நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யாப் கதை எழுதி இருந்தார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகளான, அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், விவேக் ஓப்ராய், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஈஷா தியோல் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்தது.
இருவர்:
எம்ஜிஆர் - கருணாநிதி அவர்களின் வாழ்க்கையை தழுவி புனையப்பட்ட கதையாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் இருவர். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடங்களில், தபு, கௌதமி, ரேவதி போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படமும், இப்படத்தை வெளியிட சில பிரச்சனைகள் வந்த போதிலும் அவை அனைத்தையும் சமாளித்து பின்னர் இருவர் படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், கடைசியில் வெற்றிபெறாமல் போன்றது துரதிஷ்டம் என்றே சொல்லலாம்.
கன்னத்தில் முத்தமிட்டாள்:
நடிகர் மாதவன் - சிம்ரன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கன்னத்தில் முத்தமிட்டாள்'. இழந்து மக்களின் பிரச்சனை குறித்தும் பேசப்பட்ட இப்படத்திற்கு... தேசிய விருது அந்தஸ்து கிடைத்த போதிலும், வசூல் ரீதியாக வெற்றிபெறாமல் போனது.
பிரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த ஜாக்பார்ட் பட வாய்ப்பு? இனி இவங்கள கையில பிடிக்க முடியாது!
கடல்:
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடல். இந்த படத்தில் நடிகை ராதாவின் மகள் துளசி மற்றும் நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக் ஆகியோர் கதாநாயகன் - நாயகியாக அறிமுகமாகினர். அதே போல் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அரவிந்த் சாமியும் நடித்திருந்தார். கார்த்திக் - ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படம் போன்று இந்த படமும் இருக்கும் என எதிர்பார்ப்பார்த்த நிலையில், படுதோல்வியை சந்தித்தது.
காற்றுவெளியிடை:
நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான திரைப்படம் காற்று வெளியிடை... 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், கார்த்தி விமானப்படை வீரராக நடித்திருந்தார். ஒரு அழகிய காதல் ஓவியமாக இப்படம் வெளியான போதிலும், படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.