அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது!

ஒலிம்பியா மூவிஸ், அம்பேத்குமார் வழங்கும், 'ராட்சசி' படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில், அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Arulnithi and Dushara Vijayan starrer Kazuvethi Moorkkan Title and motion poster launched

வித்தியாசமான கதைகள் மூலம் பார்வையளர்களுக்கு நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒன்று சேரும் போது அதன் ரிசல்ட் நிச்சயம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் நடிகர் அருள்நிதி தன்னுடைய கதைத் தேர்வு மற்றும் நடிப்பால் சினிமா ஆர்வலர்களையும் ரசிகர்களையும் ஈர்க்கத் தவறவில்லை. சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றியைக் கண்டதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக்கூடிய பல படங்களை அடுத்தடுத்து கைவசம் வைத்துள்ளார்.

அந்த வகையில், கவின் -அபர்ணாதாஸ் நடிப்பில் வெற்றியடைந்த 'டாடா' படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், 'ராட்சசி' படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான 'கழுவேத்தி மூர்க்கன்' அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமந்தாவுடன் சென்று 'சாகுந்தலம்' படக்குழுவினர் ஸ்ரீ பெடம்மா தல்லி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்!

Arulnithi and Dushara Vijayan starrer Kazuvethi Moorkkan Title and motion poster launched

'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 

பிகினி உடையில்... நீச்சல் குளத்தில் இருந்தபடி கவர்ச்சியில் ரணகளம் செய்யும் சர்பட்டா பட நடிகை! ஹாட் போட்டோஸ்!

Arulnithi and Dushara Vijayan starrer Kazuvethi Moorkkan Title and motion poster launched

அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா, ராஜசிம்மன், 'யார்' கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை 'ராட்சசி' படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்குகிறார்.  'கழுவேத்தி மூர்க்கன்' என அருள்நிதியின் படத்திற்கு பெயரிப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios