பிரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த ஜாக்பார்ட் பட வாய்ப்பு? இனி இவங்கள கையில பிடிக்க முடியாது!
நடிகை பிரியா பவானி சங்கருக்கு, யாரும் எதிர்பாராத விதமாக ஜாக்பாட் பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரபல திரைப்பட விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், பட குழுவினர் மிகப்பெரிய பாட்டி வைத்து, அவரின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி, வைரலானது. லோகேஷ் கனகராஜுக்கு ஒட்டு மொத்த குழுவினரும் கட்டியணைத்து, முத்தமிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
'லியோ' படத்தில் விஜய் வில்லன்களுடன் மோதும் முக்கிய காட்சிகள் தற்போது காஷ்மீரில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ஆகியோர் காட்சிகள் எடுத்து மமுடிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சஞ்சய் தத் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார்.
ஏற்கனவே இப்படத்தில் பிக் பாஸ், பிரியா ஆனந்த், போன்ற நடிகைகள் நடித்து வரும் நிலையில்... தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர், லியோ படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
இவரின் இந்த ஜாக்பார்ட் பட வாய்ப்பை குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவர் கூறியதற்கு ஏற்ற போல், கடந்த சில தினங்களாக பிரியா பவானி, காஷ்மீரில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.