சொதப்பிய அட்லீ..? தள்ளிபோகிறதா 'ஜவான்' ரிலீஸ்..!
'ஜவான்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லீயால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் சூழலில் உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்திற்கு பின்னர்... பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து, 'ஜவான்' படத்தை இயக்க திட்டமிட்டார்.
ஆனால் ஷாருக்கான் 'பதான்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால்... சுமார் 3 வருடங்கள் அவருக்காக காத்திருந்து, பின்னர் 'ஜாவான்' படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் அட்லீ. முதல் கட்டமாக இப்படம் புனேவின் துவங்கிய நிலையில், பின்னர் ஷாருக்கானின் மகன்... ஆர்யன் கான் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால், இப்படத்தின் படப்பிடிப்பு திடீர் என நிறுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் துவங்கியது.
ராஷ்மிகாவை கழட்டி விட்ட விஜய் தேவரகொண்டா... விவாகரத்தான நடிகையுடன் ஒரே ரூமில் கூத்தடிக்கிறாரா?
தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்படவில்லை. இதற்க்கு அட்லீயும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் அட்லீயின் மனைவி ப்ரியா வளைகாப்பு மற்றும் குழந்தை பிறந்தது போன்று அவரின் குடும்பத்தில் அடுத்தடுத்து விசேஷங்கள் வந்ததால், ஷூட்டிங் பணிகள் பாதித்து... குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிக்கப்படாமல் போனது.
இன்னும் படம் வெளியான இரண்டரை மாதமே எஞ்சிய நிலையில்... அதற்குள் கிராபிக்ஸ் காட்சிகளை நிறைவு செய்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளையும் முடிப்பது கடினம் என கூறப்படுவதால், ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெளியாகாமல் அக்டோபர் மதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.
ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலித்த வாரிசு நடிகர்..! சூர்யாவால் கைகூடாமல் போன லவ்!
மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில், ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் அவரின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார்.