பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு நடந்த திருமணம்..! வைரலாகும் அழகிய ஜோடிகளின் புகைப்படம்..!
பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலத்திற்கு, திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்த சீரியலில் பிரஷாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக புதிதாக இணைந்த நடிகர் தான் மகேஷ் சுப்ரமணியம். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மட்டுமின்றி, விஜய் டிவியின் மற்றொரு விறுவிறுப்பான தொடரான 'முத்தழகு' சீரியலிலும் அமுதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும், பிரேமலதா என்கிற பெண்ணுக்கும் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள், சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை இந்த தம்பதிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகேஷ் சுப்ரமணியம் பிரேமலதா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்த நிலையில், தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மகளின் திருமணத்தை சைலண்டாக நடத்தி முடித்த கருணாஸ்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்