மகளின் திருமணத்தை சைலண்டாக நடத்தி முடித்த கருணாஸ்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கென் கருணாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் கருணாஸ். அப்படத்தில் லொடுக்கு பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திமே அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது. அந்த அளவுக்கு நேர்த்தியாக நடித்திருந்தார் கருணாஸ். இதையடுத்து தனுஷுடன் திருடா திருடி, சிம்புவின் குத்து, அஜித் உடன் வில்லன் என தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவில் காமெடியனாக ஜொலித்தார் கருணாஸ்.
இதையடுத்து இவர் ஹீரோவாக திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. கருணாஸ் நடிகராக மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். கருணாஸின் மனைவி கிரேஸும் சினிமாவில் பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்களை பாடி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு கென் என்ற மகனும், டயானா என்கிற மகளும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஒருவேள கொன்றுப்பாங்களோ! காஷ்மீர் சென்ற 3 நாளில் சென்னைக்கு ரிட்டர்ன் ஆன திரிஷா - கேள்வியெழுப்பும் நெட்டிசன்ஸ்
கருணாஸின் மகன் கென், சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து அசத்தி இருந்தார். அப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இதுதவிர அழகு குட்டி செல்லம், ரகளபுரம் போன்ற படங்களிலும் கென் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர், தனது தாய் கிரேஸ் உடன் இணைந்து உருவாக்கி இருந்த வாடா ராசா என்கிற ஆல்பம் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.
இவ்வாறு கருணாஸ் குடும்பத்தில் 3 பேரும் சினிமாவில் பாப்புலராக இருந்தாலும், மகள் டயானாவை மட்டும் சினிமா பக்கம் கொண்டுவராமல் வைத்திருந்தார் கருணாஸ். டாக்டருக்கு படித்துள்ள டயானாவுக்கு தற்போது சைலண்டாக திருமணத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார் கருணாஸ். தனது அக்காவின் திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கென் கருணாஸ், வாழ்த்துக்கள் மாமா & அக்கா என வாழ்த்தி இருக்கிறார். இதையடுத்து அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம்… அவர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?