துணிவு படத்தின் வெற்றியை குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடிய அஜித்... ஷாலினி வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்
துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட, தற்போது குடும்பத்தினருடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் வங்கியில் நடக்கும் சுரண்டல்களைப் பற்றியும், மக்களின் பணம் எவ்வாறு சூரையாடப்படுகிறது என்பதைப் பற்றியும் தோலுரித்து காட்டி இருந்தனர். அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், வீரா, அமீர், பாவனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் கலெக்ஷனை அள்ளி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் அஜித்துக்கு வெளிநாட்டில் மவுசு அதிகரித்து உள்ளது. அஜித்தின் கெரியரில் வெளிநாட்டில் அதிக கலெக்ஷன அள்ளிய படமாக துணிவு மாறி உள்ளது. இதனால் அஜித் செம்ம ஹாப்பியாக உள்ளாராம். ஒருபக்கம் தனது அடுத்த படமான ஏகே 62 படத்தின் இயக்குனர் தேர்வில் இழுபறி நீடித்து வந்தாலும், துணிவு படத்தின் வெற்றியை ஜாலியாக கொண்டாடி வருகிறாராம் அஜித்.
இதையும் படியுங்கள்... டாப் கியரில் செல்லும் விஜய்... தடுமாறும் அஜித் - மற்றுமொரு இயக்குனரின் வருகையால் AK 62வில் நீடிக்கும் குழப்பம்
அதன்படி துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட, தற்போது குடும்பத்தினருடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அவர், அங்கு ஜாலியாக பொழுதை கழித்து வருகிறாராம். அங்கு எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்தை இயக்க முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அப்படத்தை இயக்க இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் ஏகே 62 குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மகளின் திருமணத்தை சைலண்டாக நடத்தி முடித்த கருணாஸ்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்